பெங்களூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

14 hours ago 10

ba64a5e4-148f-4cf7-9351-97f279cac2e4

கடந்த ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை பெங்களூரு, மும்பையில் நடத்திய சோதனையின் போது ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் பலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. - கோப்புப் படம்: தி ஹன்ஸ் இந்தியா

பெங்களூரு: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களும் நிதியும் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூரு நகரத்தில் எட்டு இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்காத வண்ணம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பயங்கரவாதிகள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என பலரும் கைது நடவடிக்கைக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை பெங்களூரு, மும்பையில் நடத்திய சோதனையின் போது ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் பலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இரண்டு அறக்கட்டளைகள் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தனி நபரிடம் இருந்து நிதி வசூல் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்கள் தெரிய வந்தன. அவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறையினரும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அறக்கட்டளைகள் மூலம் அந்நியச் செலாவணி மோசடி, நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்த அமலாக்​கத்​துறை அதி​காரி​கள், பெங்​களூரு​வில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மேற் குறிப்பிட்ட அறக்கட்டளைகளின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகளுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் அறக்கட்டளைகள் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதை உறுதி செய்யும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இந்த அறக்​கட்​டளை​கள் செல்​வந்​தர்​களிடம் நிதி திரட்​டி, இளையர்​களை துருக்கி வ‌ழி​யாக சிரி​யா​வுக்குச் செல்ல உதவியது தொடர்​பான ஆவணங்​களும் சிக்​கி​யுள்​ள​தாக அமலாக்​கத்​துறை வட்டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

Read Entire Article