பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி நாள் – 2026

1 hour ago 12

வல்லம், மே. 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) கணினி பயன்பாட்டுத் துறை, ஆராய்ச்சி மய்யத்துடன் இணைந்து ஆராயச்சி நாள் – 2026 என்ற ஒரு நாள் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு – இந்நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் அரங்கில் நடைபெற்றது.

இந்த  ஆராய்ச்சி நாளில் மொத் தம் 270 இறுதியாண்டு முதுநிலை மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிப் பணிகளை ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் விளக்கக் காட்சிகள் மூலமாக வழங்கினர். இதில் முதுகலை எம்.டெக் கட்டட பொறியியல், இயந்திர பொறியியல், கணினி பயன்பாட்டுத் துறை, வணிக மேலாண்மை, கணினி அறிவியல்,  தரவு அறிவியல், உயிரித் தொழில் நுட்பவியல், வேதியியல், இயற்பியல்,  ஆங்கிலம்,  கணிதம், முதுகலை சமூகப்பணி, முதுகலை வர்த்தகம் மற்றும் முதுகலை அரசியல் – அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் சுமார் 200 முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆராய்ச்சிப் பணிகளையும் மாண வர்களின் விளக்கக் காட்சிகளையும் பார்வையிட்டுப் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஆராய்ச்சித்துறை பேராசிரியர் பாலகுமார் பிச்சை, பேராசிரியர் குமரன், மற்றும் துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிகளை மதிப்பாய்வு செய்தனர். மேலும் மாணவர்களின் புதிய சிந்தனைகள், புதுமையான ஆராய்ச்சி அணுகுமுறைகள் மற்றும் விளக்கத் திறன்களைப் பாராட்டினர்கள்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மாணவர்களிடையே ஆராய்ச்சிக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவர்களின் அறிவை மேம்படுத்துவது மற்றும் ஆராய்ச்சிப் பார்வையை வளர்த்தெடுப்பதாகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது. மேலும் ஆராய்ச்சி தொடர்பான அறிவை மாணவர்களிடையே வெளிக்கொணர்ந்து எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை களில் முன்னேற ஊக்கமளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இணைப்பேராசிரியர் பேராசிரியர் அ.இம்மாகுலேட் மெர்சி மற்றும் துறைத்தலைவர், இணைப் பேராசிரியர்  பேராசிரியர் சு.மணி மொழி  பி.கார்த்தி ஆகியோர் ஒருங் கிணைத்தனர்.

Read Entire Article