பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

22 hours ago 17

அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம் - காரணம் என்ன?

Published:30 mins agoUpdated:30 mins ago

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் 'தமிழ்நாடு' - இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு.

முதல் இரண்டு மாநிலங்கள் என்ன?

16-வது நிதிக்குழு அறிக்கையின் தொகுதி 1-ன் படி, 2022-23 நிதியாண்டில்...

உத்தரப்பிரதேசம் ரூ.32,430 கோடி நஷ்டத்தையும்,

ராஜஸ்தான் ரூ.18,814 கோடி நஷ்டத்தையும்,

தமிழ்நாடு ரூ. 16,048 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதி அல்லாத மாநிலங்களில் (Non- NEH States) சேர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TANGEDCO

TANGEDCO

ஏன் இந்த நஷ்டம்?

பிற Non- NEH மாநிலங்களைப் போலவே, இந்த மாநிலங்களுக்கும் நஷ்டம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது 'மின்சாரத் துறை'.

2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) ரூ.9,192 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஆனால், அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், TANGEDCO-வின் கீழ் இயங்கும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட் (TNPDCL) 2024-25 நிதியாண்டில் ரூ.2,073 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

Read Entire Article