சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி தொடங்கியுள்ள புது ஓட்டலில் வேலை பார்க்குமாறு ரவியை பிரைன் வாஷ் செய்கிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
14
Image Credit :
youtube/vijaytelevision
Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் அம்மா - அப்பா, விஜயாவை சந்தித்து பேசிய நிலையில், வீட்டிற்கு வரும் விஜயா, ரவியை அமரவைத்து அவனிடம் பேசுகிறார். ஸ்ருதியுடன் சேர்ந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்துகிறார் விஜயா. ஸ்ருதி அவங்க அப்பாகிட்ட காசு வாங்கி ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சிருக்கா, என்னால அதுல வேலை செய்ய முடியாது என சொல்கிறார். இதையடுத்து ரவியை பிரைன் வாஷ் செய்ய தொடங்கிய விஜயா, ஏண்டா உங்க அப்பா மாதிரி நீயும் பிழைக்க தெரியாதவனா இருக்க என கேட்கிறார். ஸ்ருதி அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு, அவங்க அப்பா சம்பாதிச்சது எல்லாம் அவளுக்கு தான் வரும் என சொல்கிறார்.
24
Image Credit :
youtube/vijaytelevision
ரவியிடம் விஜயா வைக்கும் கோரிக்கை
ஸ்ருதியின் சொத்தில் உனக்கும் உரிமை இருக்கிறது என கூறுகிறார் விஜயா, அதற்கு ரவி, நான் நம்ம அப்பாகிட்ட இருந்தே காசு வாங்கக் கூடாதுனு நினைப்பவன் என சொல்ல, அதற்கு விஜயா, அது தான் உன்கிட்ட இருக்க பிரச்சனையே, ஒழுங்கா நான் சொல்றத கேளு, ஸ்ருதியோட ஓட்டலுக்கே நீ போயிடு, உன்னுடைய திறமையால நீ இன்னும் நிறைய ஓட்டல் ஆரம்பிக்கலாம் என ஆசை வார்த்தை கூறுகிறார். இதற்கெல்லாம் செவி சாய்க்காத ரவி, தனக்கு தற்போது அந்த ஐடியாலாம் இல்லை என கூறிவிடுகிறார். அப்பா எனக்கு கொடுத்த படிப்பு இருக்கு, அதுபோதும், என்னுடைய சொந்த முயற்சியில் முன்னேறிக் கொள்கிறேன் என சொல்கிறார் ரவி.
34
Image Credit :
youtube/vijaytelevision
விஜயாவை திட்டும் அண்ணாமலை
உங்க அப்பா மாதிரியோ, முத்து மாதிரியோ உருப்படாத விஷயமா யோசிக்காம, கொஞ்சமாவது மனோஜ் மாதிரி யோசிடா என சொல்கிறார் விஜயா. எனக்கு அந்த காலத்துல ரெயில் இன்ஜின் டிரைவர கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. என் வாழ்க்கை அப்படியே தான் இருக்கு. ஆனால் உனக்கு அப்படி இல்ல. தேடி வர்ற மகாலட்சுமியை வேண்டாம்னு சொல்லாத என விஜயா பேசிக் கொண்டிருக்க அப்போது எண்ட்ரி கொடுக்கும் அண்ணாமலை, என்னை கல்யாணம் பண்ணிட்டு நீ சோத்துக்கு வழியில்லாம ரோட்டுலயா நின்னுட்டு இருந்த என கடிந்து கொள்கிறார். பசங்க நல்லா வரணும்னு நினைக்குறது தப்பு இல்ல, அதற்காக அவனுக்கு பிடிக்காத விஷயத்தை பண்ண சொல்லாத என புத்திமதி சொல்கிறார் அண்ணாமலை.
44
Image Credit :
youtube/vijaytelevision
ரோகிணியை தரக்குறைவாக பேசும் விஜயா
பின்னர் மீனா ஆன்லைனில் பூ விற்க தொடங்க உள்ள விஷயத்தை அறிந்த விஜயா, அதற்காக அவரை பாராட்டி பேசுகிறார். நம்ம அம்மாவ இப்படி என அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அதேவேளையில் அங்கு இருக்கும் ரோகிணியை பார்த்து நான் யாரெல்லாம் பெருசா வருவாங்கனு நினைச்சேனோ அதெல்லாம் உதவாக்கரையா வந்திருக்கு என சொல்கிறார். மலேசியா பணக்காரினு பச்சையா பொய் சொன்னா, அப்புறம் நான் சொந்தமா பணக்காரி ஆவேன்னு பில்டப் பண்ணினா ஒன்னத்தையும் காணோம். மனோஜ் உன் பொண்டாட்டி என்ன தான் பண்ண போறான்னு ஒன்னுமே புரியல என கூறுகிறார் விஜயா. இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.