‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற படத்தில் ஜீவா தோன்றும் காட்சி. - படம்: தினமலர்
Jeeva in the film Mammotty was supposed to act in.
Due to Mammootty's ill health, Jeeva replaced him in the film 'Thalaivar Thambi Thalaimaiyil', directed by Nithish Sahadev. Sahadev had initially narrated the story to Mammootty, who liked it but couldn't commit. The film's trailer has been released to a positive reception. Industry insiders are hopeful that the film will be a turning point in Jeeva's career.
Generated by AI
மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க விரும்பிய படத்தில் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜீவாவிற்குக் கிடைத்துள்ளது. அவர் ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இந்தக் கதையை முதலில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியிடம் கூறியுள்ளார். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்த போதிலும், அந்தச் சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இப்படத்தில் அவரோடு இணைய முடியாமல் போனது.
அதனைத் தொடர்ந்தே இந்தக் கதை நடிகர் ஜீவாவிற்கு வந்துள்ளது. இந்தப் படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்து, அவரை மீண்டும் பழைய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனத் திரையுலக வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.
.png)




English (US) ·