மரணத்தின் மடியில் ஒரு விதை

2 hours ago 18

நீர் வற்றிய ஏரித் தரைமேல்,

கதிரவன் கோடு கிழிக்க,

செத்த மீன்கள் சிதறிக் கிடக்க,

விருந்தாய் வந்த பசி தீர்க்க

கொக்குகள் கூட்டம் குதூகலிக்குதே!

அடிமணலில் உறங்கிய தாமரை விதை,

மரணத்தின் மடியில் மெதுவாய் விழித்து,

நெடுநெடுவென நிமிர்ந்து நின்று,

பச்சைத் திரையாய் விரிந்து நிற்க,

உண்ட மயக்கத்தில் கொக்கு உறங்குதே!

பாலா ரமேஷ்

Read Entire Article