மறந்துகூட இந்த விரல்களில் தங்க மோதிரம் அணியாதீங்க.! சனி பகவான் கோபத்திற்கு ஆளாவீங்க.! தோஷம் பிடிக்கும்.!

1 hour ago 13

Best finger to wear gold ring as per astrology : ஜோதிட சாஸ்திரத்தின் படி தங்கம் என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல. அது குரு பகவானின் அம்சமாகும். இந்த பதிவில் எந்த விரலில் தங்கம் அணியலாம்? எதில் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். 

2 Min read

Published : Mar 10 2026, 04:43 PM IST

15

தங்க மோதிரம் அணிவதற்கான விதிமுறைகள்

Image Credit : pinterest

தங்க மோதிரம் அணிவதற்கான விதிமுறைகள்

நாம் அனைவருக்குமே தங்க நகை அணிய வேண்டும் என்கிற விருப்பம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின்படி தங்க நகை என்பது குரு பகவானின் அம்சமாகும். இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வல்லமை கொண்டது. ஆனால் அதை எந்த விரலில் அணிகிறோம் என்பதை பொறுத்து நம் வாழ்வின் முன்னேற்றமும், உடல் நலமும் அமைகிறது. ஜோதிட சாஸ்திரங்களின்படி சில விரல்களில் தங்கம் அணியலாம். சில விரல்களில் அணியக்கூடாது என்கிற வரைமுறை உண்டு. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25

புதன் குரு பகை கிரகங்கள்

Image Credit : instagram @satvagold and pinterest

புதன் குரு பகை கிரகங்கள்

ஜோதிட ரீதியாக சுண்டு விரலில் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். சுண்டு விரல் என்பது புதன் பகவானுக்குரிய இடமாகும். தங்கம் குரு பகவானுக்குரியது. ஜோதிட ரீதியாக குருவுக்கும் புதனுக்கும் இடையே ஒருவித பகைமை அல்லது சமநிலை இல்லாத உறவு உண்டு. எனவே இந்த விரலில் தங்கம் அணியும் பொழுது அது புதன் பகவானின் காரகத்துவங்களான பேச்சு, அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் தொழில் ரீதியான முடிவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும் சுண்டு விரலில் தங்கம் அணிவது ஒருவரின் கவனச் சிதறலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

35

தங்க மோதிரம் எந்த விரலில் அணியக்கூடாது?

Image Credit : instagram @bdsjewels_ pinterest

தங்க மோதிரம் எந்த விரலில் அணியக்கூடாது?

அதேபோல் நடுவிரல் சனி பகவானால் ஆளப்படுகிறது. இந்த விரலில் தங்க மோதிரம் அணியும் பொழுது வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். எடுக்கும் காரியங்களில் பின்னணிவுகள் உருவாகலாம். மற்றவர்களைக் காட்டிலும் உங்கள் வாழ்க்கையில் குறைந்த அளவிலேயே முன்னேற்றம் இருக்கும். சில ஜோதிடர்களின் கூற்றுப்படி சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட இந்த விரலில் தங்கம் அணிவது ஒருவருக்கு எதையும் தாங்கும் வலிமையைத் தரும். ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருப்பவர்கள் மட்டுமே இங்கு தங்கம் அணிவது நல்லது.

45

தங்க மோதிரம் எந்த விரலில் அணியலாம்?

Image Credit : pinterest

தங்க மோதிரம் எந்த விரலில் அணியலாம்?

மோதிர விரல் தங்கம் அணிவதற்கு மிகச்சிறந்த விரலாக உள்ளது. இந்த விரல் சூரியனுக்குரியது. சூரியனும், குருவும் நட்பு கிரகங்களாகளாவர். இங்கு தங்கம் அணிவது புகழ், கௌரவம், மற்றும் ஆளுமைத் திறனை அதிகரிக்கும். திருமணமானவர்கள் இந்த விரலில் தங்கம் அணிவது குடும்ப உறவை பலப்படுத்தும். அதேபோல் ஆள்காட்டி விரல் குரு பகவானுக்குரியது. தங்கம் குருவின் உலோகம் என்பதால் அவரது விரலிலேயே அதை அணிவது மிகவும் நன்மை தரும். இது ஒருவருக்கு தலைமைப் பண்பு, ஆன்மீக அறிவு மற்றும் கல்வியில் முன்னேற்றத்தை அளிக்கும்.

55

தங்கம் அணியக்கூடாத பாகங்கள்

Image Credit : chatgpt and aurafinejewelry.com

தங்கம் அணியக்கூடாத பாகங்கள்

தங்கம் மகாலட்சுமியின் அம்சமாகவும், குருவின் உலோகமாகவும் கருதப்படுவதால் இடுப்புக்கு கீழே குறிப்பாக மெட்டி போன்ற வடிவில் தங்கம் அணியக்கூடாது. இது செல்வத்தை இழக்க செய்யும் என்று கூறப்படுகிறது. பொதுவாக வலது கையில் தங்கம் அணிவது அதிக நன்மைகளைத் தரும். இடது கையில் தங்கம் அணிவது சில நேரங்களில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கலாம். இது தனிப்பட்ட நபரின் ஜாதகத்தைப் பொறுத்து மாறுபடலாம். தங்கம் சுத்தமாக இருக்க வேண்டும் அழுக்கு படிந்து அல்லது சேதமடைந்த தங்க மோதிரங்களை அணிவது குரு பகவானின் பலனைக் குறைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read Entire Article