மலேசியாவில் பிரதமர் மோடி

2 hours ago 14

40a88061-80f6-483f-8718-6135560527f9

இந்தியப் பிரதமர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

Prime Minister Modi in Malaysia

Indian Prime Minister Narendra Modi will meet Malaysian Prime Minister Anwar Ibrahim on Sunday, February 8, in Putrajaya, Malaysia. This meeting, taking place after the two countries strengthened their comprehensive strategic partnership in August 2024, aims to boost trade and explore collaborations in semiconductors, security, and other sectors. Several collaboration agreements in healthcare, national security, and labour will be signed during Modi's two-day trip, according to Wisma Putra.

Generated by AI

கோலாலம்பூர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகளும் வர்த்தகத்தை வலுப்படுத்தவும், மின்கடத்திகள், பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராயவும் முயற்சி செய்கின்றன.

ஆகஸ்ட் 2024ல் இரு நாடுகளும் ஒரு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உறவுகளை வலுப்படுத்திய பிறகு மோடி மலேசியாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள மலேசியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அன்வாருடனான அவரது சந்திப்பு நடைபெறும்.

அங்கு சுகாதாரப் பராமரிப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உள்ளிட்ட துறைகளில் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read Entire Article