மானாவாரி நிலத்திலும் இனி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்... விவசாயிகளே நோட் பண்ணுங்க...

19 hours ago 16

Last Updated:May 12, 2026 11:40 AM IST

மானாவாரி நிலங்களில் சரியான பயிர் தேர்வு, கலப்பு சாகுபடி மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு ஆகியவற்றை பின்பற்றும் விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.

சாகுபடி

மானாவாரி நிலங்களில் சரியான திட்டமிடலுடன் வேளாண் பணிகளை மேற்கொண்டால் அதிக லாபம் பெற முடியும் என்று வேளாண் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஒரு நீண்டகால பயிரை மட்டும் சாகுபடி செய்வதை விட, குறுகிய காலம் கொண்ட இரண்டு பயிர்களை ஒரே பருவத்தில் அல்லது தொடர்ச்சியாக சாகுபடி செய்வது அதிக வருமானத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

சாகுபடி

முதல் பருவத்தில் கிடைக்கும் மழை மற்றும் நில ஈரப்பதத்தை திறம்பட பயன்படுத்தி, அதன் பின்னர் மற்றொரு பயிரை சாகுபடி செய்தால் நிலத்தின் முழுத் திறனையும் பயன்படுத்த முடியும். மேலும், இரண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிராக சாகுபடி செய்வதன் மூலம் பருவமழை குறைந்தாலும் குறைந்தபட்சம் ஒரு பயிரிலாவது விளைச்சல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சாகுபடி

தீவனப் பயிர்களில் சோளம் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றதாக உள்ளது. இதனுடன் தட்டைப்பயிறு, வேலிமசால் போன்ற பயறு வகைகளை ஊடுபயிராக வளர்த்தால் கால்நடைகளுக்கான தீவனத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், சூபாபுல் போன்ற தீவன மரங்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் தீவனச் செலவு குறைந்து, கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் வருமானமும் பெறலாம்.

சாகுபடி

அதேபோல், கொய்யா, இலந்தை, மா, சப்போட்டா, மாதுளை போன்ற பழமரங்களையும் மானாவாரி நிலங்களில் வெற்றிகரமாக வளர்க்கலாம். இம்மரங்களுக்கு முதல் ஆண்டில் மட்டும் நீர் பாய்ச்சினாலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும். தொடக்க வளர்ச்சி காலத்தில் தட்டைப்பயிறு, பாசிப்பயறு, கொள்ளு போன்ற பயிர்கள் அல்லது தீவனப் புல்களை இணைத்து சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

சாகுபடி

மேலும், அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் போன்ற உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் வேர் வளர்ச்சி மேம்பட்டு, மண்ணின் வளமும் அதிகரிக்கும். மண்ணில் போதிய ஈரப்பதம் இருக்கும் நேரத்தில் மேலுரமாக தழைச்சத்து சேர்ப்பதும் பயிர் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதனால், மானாவாரி நிலங்களில் சரியான பயிர் தேர்வு, கலப்பு சாகுபடி மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு ஆகியவற்றை பின்பற்றும் விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும் என்று வேளாண் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

GNWL vs TQWL... எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்? பலருக்கும் தெரியாத தகவல்! | Indian Railways

GNWL vs TQWL.. எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்?

  • காத்திருப்புப் பட்டியலில் GNWL டிக்கெட்டுகள் முதலில் உறுதி செய்யப்படவாய்ப்பு.

  • GNWL-ல் பொது பிரிவில் ரத்து வாய்ப்பு அதிகம் என்பதால் உறுதி சாத்தியம் உயரும்.

  • TQWL தட்கல் டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்பேகிடைப்பதால் உறுதி வாய்ப்பு குறைவு.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article