சென்னை, ஜூலை 22– தமிழ்நாட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அதிகாரிகளுக்குப் புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளார்.
புதிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
பணிகளின் விவரம்: உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளை முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண் மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற சிறப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
சிறப்புப் பணிகள்: பணித் தளத்தில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
குழுப் பணிகள் மற்றும் பணி அளவு: பணி தளங்களில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களை மண் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். அப்போது அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணி அளவில் 50 சதவீதம் மட்டுமே செய்ய முன் அளவீடு செய்யப்பட வேண்டும்.
வேலை நேரம்: மண் வேலை சார்ந்த பணிகளை மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் மட்டுமே செய்தால் போதுமானது.
வேலை அட்டை விநியோகம்: வேலை அட்டை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி 15 நாட் களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்கப்பட வேண்டும். விபிஜி ராம்-ஜி வழங்குவதில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது.
குறைகேள் முகாம்: மாற்றுத்திறனாளிகளின் குறைகளைத் தீர்க்கும் விதமாக பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையில் குறைகேள் முகாம் நடத்தப்பட்டு, குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த புதிய நடைமுறைகளை மாவட்ட அளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.png)
1 hour ago
5








English (US) ·