மிசோரம் இஞ்சி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் அங்குள்ள விவசாயிகளின் வருவாய் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். - கோப்புப் படம்: ஸ்க்ரால்.இன்
அய்சால்: மிசோரம் மாநிலத்தில் வேளாண் துறையை ஊக்குவிக்கும் விதமாக, ரூ.189.79 கோடி மதிப்பிலான ‘மிசோரம் இஞ்சி இயக்கம்’ எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன் மூலம் இஞ்சி சாகுபடி, அதன் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை மேம்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வடகிழக்கு வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மிசோரம் முதல்வர் லால்டுஹோமா ஆகியோர் காணொளி மூலம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
மிசோரம் இஞ்சி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் அங்குள்ள விவசாயிகளின் வருவாய் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
மிசோரம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் இஞ்சியில் 6 முதல் 8 விழுக்காடு வரை ‘ஒலியோ ரெசின்’ என்ற சத்து இருப்பதால் அவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இது உலக சராசரியான 3 விழுக்காட்டைவிட அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“அனைத்துலகச் சந்தையில் ஒரு கிலோ இஞ்சி ரூ.500க்கு மேல் விற்பனையாகும் நிலையில், இந்திய விவசாயிகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே வருமானம் பெறுகின்றனர்.
“எனவே, இடைத்தரகர்களை அகற்றி, விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிடைக்கச் செய்வதே மிசோரம் இஞ்சி இயக்கத்தின் நோக்கம். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் 6 மடங்கு அதிகரிக்கும்,” என்றார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
.png)






English (US) ·