மு.க.அழகிரிக்கு நேர்ந்த கதிதான்..! செந்தில் பாலாஜி காணாமல் போவார்..! ஆதவ் அர்ஜுனா ஆவேசம்..!

22 hours ago 13

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அரசியலில் இருந்து காணாமல் போனதை போல், கரூரில் செந்தில் பாலாஜி காணாமல் போவார். கரூர் காவல்துறை செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருகிறது, விரைவில் தவெக ஆட்சி அமைந்த பின் கரூர் சுத்தம் செய்யப்படும் 

14

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, பல்வேறு வகைகளில் திமுக தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பிரிவு மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

24

அதில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்தது உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கரூர் சம்பவம் நடைபெற்றதிலிருந்து வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து கொண்டிருந்தோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத எழுச்சி விஜயின் பிரச்சாரத்தில் இருந்தது. 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை நாங்கள் பார்த்தோம். பெரும்பாலான மாவட்டங்களில் விஜயின் பிரச்சாரத்தின் போது காவல்துறையினர் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

ஆனால் கரூரில் காவல்துறையினர் ஒத்துழைப்பு தரவில்லை. கரூர் காவல்துறையினர் சொன்ன நேரத்தில்தான், அதாவது மூன்று மணியிலிருந்து பத்து மணிக்குள்ளாகத்தான் பிரச்சாரம் செய்தோம். ஆனால் விஜய் தாமதமாக வந்ததாக அவதூறு பரப்புகின்றனர். எந்த ஊரிலும் இல்லாத வகையில் கரூர் மாவட்ட எல்லையிலே காவல்துறையினர் எங்களை வரவேற்றனர். திட்டமிட்டு நெரிசல் மிகுந்த வேலுச்சாமிபுரத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பான உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்.

34

Image Credit :

Asianet News

மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்த போது சென்னையில் ஒரு நீதிபதி அதை விசாரித்தார். அப்போது எங்கள் தலைவர் குறித்தும் கட்சி குறித்தும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் நீதிபதி. ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்து அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை வரலாற்றில் இவ்வாறு நடக்காததால் எங்களை முடக்க திட்டமிடுவதை நாங்கள் புரிந்து கொண்டோம். உச்ச நீதிமன்றம் சென்று மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

சிபிஐ விசாரணை கோரி தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நான் தொடர்ந்த வழக்கில் தான். பிறர் வழக்கு தொடர்ந்தது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தற்போது எங்கள் கோரிக்கை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் மூன்று கோரிக்கைகள் வைத்திருந்தோம். ஒன்று உச்ச நீதிமன்றம் விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதுதான். அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இது மூன்றுமே எங்களுக்கு சாதகமானது. விரைவில் உண்மை வெளிவரும்’’ என்றார்.

44

Image Credit :

x/Aadhav Arjuna

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அரசியலில் இருந்து காணாமல் போனதை போல், கரூரில் செந்தில் பாலாஜி காணாமல் போவார் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் காவல்துறை செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆதவ் அர்ஜுனா, விரைவில் தவெக ஆட்சி அமைந்த பின் கரூர் சுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article