Last Updated:May 12, 2026 12:14 PM IST
சட்டப்பேரவை மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரை இருக்கையில் அமரவைத்தனர்.

சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக தவெகவைச் சேர்ந்த சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் தேர்தலுக்கு தவெகவைச் சேர்ந்த ஆயிரம் விளக்கு எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சட்டப்பேரவை முதன்மைச் செயலாளரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார். மேலும், துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ ரவிசங்கர் துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வழங்கினார். இவர்களை தவிர வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் சபாநாயகர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதையடுத்து சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரை இருக்கையில் அமரவைத்தனர். இதையடுத்து சபாநாயகருக்கு முதலமைச்சர் விஜய், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர், முதலமைச்சர் விஜய் மற்றும் நான் அனைவரும் ஒரே காலேஜில் தான் படித்தோம். ஆனால் அரசை நடத்துவதில் திமுக தான் சீனியர். 1967 ஆம் ஆண்டே ஆட்சிக்கு வந்தது திமுக தான். அதன் அடிப்படையில் எங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள்.
இதற்கு முந்தைய சட்டப்பேரவையை எடுத்து கொண்டால் ஆளுங்கட்சி வரிசையில் அதிக உறுப்பினர்களும் எதிர்கட்சி வரிசையில் அதை விட குறைவான உறுப்பினர்களும் இருப்பார்கள். ஆனால் இந்த முறைக்கு எதிர்கட்சி வரிசையில் சரிக்கு சமமாக உறுப்பினர்கள் உள்ளது பேரவையின் ஒரு சிறப்பு என்று தெரிவித்தார்.
Location :
Chennai,Tamil Nadu
First Published :
May 12, 2026 12:14 PM IST
.png)






English (US) ·