Last Updated:May 12, 2026 8:07 PM IST
தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயின் முன்னாள் கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் இருந்துவந்த ராஜேந்திரனின் மகன் சபரிநாதன்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனி பெரும் கட்சியாக வென்ற தவெக, பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பது, சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரை நியமிப்பது, குறிப்பிட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை தனது அரசியல் சிறப்புப் பணி அலுவலராக (OSD) அரசாணை பிறப்பிப்பு, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை மீட்க வெளியுறவுத் துறைக்கு கடிதம் என முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புகளும், நடவடிக்கைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், தவெக அரசின் கொறடா நியமனமும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எம்.ஜி.ஆரின் குட் புக்கில் இடம் பெற்ற ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்த முதலமைச்சர் விஜய், தனது கட்சியின் முதல்முறை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. சபரிநாதனை அரசு கொறடாவாக நியமித்துள்ளார்.
தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயின் முன்னாள் கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் இருந்துவந்த ராஜேந்திரன் என்பவரின் மகனான சபரிநாதனுக்கு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி, தேர்தலில் விருகம்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பு ஆகியவை வழங்கப்பட்டது.
விருகம்பாக்கத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் வந்த சபரிநாதன் தற்போது அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அனைத்து சலுகைகளும் அரசு கொறடாவிற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜயின் உதவியாளர் மகனுக்கு அமைச்சருக்கு நிகரான பதவி! அரசு கொறடாவாக சபரிநாதன் நியமனம்
.png)








English (US) ·