முதல் முறையாக சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி.. உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி.!!

1 hour ago 16

Last Updated:Feb 26, 2026 12:29 PM IST

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் சேகோசர்வ் கூட்டுறவு நிறுவனம் மூலம் புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி முதல் முறையாக கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கனடா ஏற்றுமதி

சேலம் ஜவ்வரிசியின் தனித்துவமான தரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில், 2023-ஆம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தியாவின் மொத்த ஜவ்வரிசி தேவையில் 80%-க்கும் அதிகமான பங்களிப்பை சேலம் மண்டலம் வழங்குகிறது.

கனடா ஏற்றுமதி

இங்குள்ள 400-க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்கள் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. தரமான தயாரிப்பு முறையினால், இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே தற்போது முதல் முறையாக கனடா நாட்டிற்கு நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜவ்வரிசி உற்பத்தியும் விலையும் அதிகரிக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கனடா ஏற்றுமதி

நம் நாட்டிலேயே மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி அதிகம். இம்மாவட்டங்களில் உள்ள மண்வளம் மற்றும் கால நிலை காரணமாக இங்கு மரவள்ளிக்கிழங்கு சுவை தனித்து காணப்படுகிறது.

கனடா ஏற்றுமதி

இந்த மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு (சேகோ) 334 தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள பேக்டரிகளில் ஆண்டுக்கு சுமார் 35லட்சம் மூட்டைகள் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் ஜவ்வரிசி உற்பத்தியில் 80 சதவீதம் சேலம் மாவட்டம் தான் பங்களிக்கிறது. மஹாராஷ் டிரா, ராஜஸ்தான், குஜராத் வர்த்தகர்கள் பெருமளவில் வாங்குகிறார்கள்.

கனடா ஏற்றுமதி

இந்நிலையில், தமிழகத்திலிருந்து முதன்முறையாக 'அபெடா' என்றழைக்கப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் கனடாவுக்கு முதல் முறையாக ஜவ்வரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கனடா ஏற்றுமதி

புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி சிறப்பு வாய்ந்தது என்பதனால், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியில் முதன்முறையாக 500 கிலோ (0.5 மெட்ரிக் டன்) கனடா நாட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜவ்வரிசி ஏற்றுமதி அதிகரித்தால் உற்பத்தியும், விலையும் அதிகரிக்கும் என்பதால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் முறையாக சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி.. உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி.!!

Sago export : முதல்முறையாக சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி..! 

  • சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற்றது, முதல் முறையாக 500 கிலோ கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

  • சேகோசர்வ் நிறுவனம் மற்றும் அபெடா உதவியுடன், உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • சேலம் மாவட்டம் இந்திய ஜவ்வரிசி தேவையில் 80% பங்களிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பால் விலை உயரும் எதிர்பார்ப்பு.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article