முதல்வர் விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு

1 hour ago 10

7185c26d-f732-479f-a37c-8571314a3f7e

வீட்டு மின் நுகர்வோர்க்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவுக்கான கோப்பில் அவரது முதல் கையெழுத்து இடம்பெற்றது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மூன்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு, அவை தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்.

தமிழகம் முழுவதும் வீட்டு மின் நுகர்வோர்க்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவுக்கான கோப்பில் அவரது முதல் கையெழுத்து இடம்பெற்றது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘சிங்கப்பெண்’ அதிரடிச் சிறப்புப் படையை அமைப்பதற்கான உத்தரவில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில், போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாநகர, மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடை அலகுகள் அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 10) சென்னை நேரு விளையாட்டரங்கில் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் தனது அமைச்சரவையில் உள்ள ஒன்பது அமைச்சர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்குச் சென்றார் விஜய். அங்கு அவருக்கு அதிகாரிகளும் தலைமைச் செயலர் ஊழியர்களும் வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article