Last Updated:May 17, 2026 8:47 AM IST
96 மற்றும் மெய்யழகன் படங்கள் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர் பிரேம்குமார், தன்னுடைய 3ஆவது படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்துள்ளார்.

96 மற்றும் மெய்யழகன் படங்கள் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர் பிரேம்குமார், தன்னுடைய 3ஆவது படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் ஷிவதா, சேத்தன், ஹரிஷ் உத்தமன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 96 மற்றும் மெய்யழகன் படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கும் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.
மனதை வருடும் காதல் மற்றும் உறவுகள் குறித்து இயக்குநர் பிரேம்குமார் படங்களை இயக்கிய நிலையில், முதல் முறையாக ஆக்சன் கலந்த த்ரில்லர் வகை திரைக்கதையை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
.png)

English (US) ·