Last Updated:Jul 26, 2026 12:58 PM IST
மேகதாது அணை விவகாரம் திமுக அரசின் குளறுபடியால் ஏற்பட்டது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டினார். கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவால் தமிழகத்திற்கு பலன் என்றார்.

கடந்த திமுக ஆட்சியின் சட்டக் குளறுபடிகளால்தான் காவிரி மேகதாது அணை விவகாரம் இன்று மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மற்றும் மேகதாது பிரச்சினையில் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது உண்மைக்கு முரணானது என்றும், தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், கடந்த திமுக ஆட்சியில், மேகதாதுவுக்கு எதிரான மறுசீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை வலுவாக எடுத்துவைக்கவில்லை என்றும், இதனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமைக் குரலை திசை திருப்ப விரும்பவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இதனிடையே, மேகதாது பிரச்சினையை நேர்மறையான அணுகுமுறையுடன் கையாள்வதாகவும், மேகதாதுவால் தமிழ்நாட்டுக்கே அதிக பலன் கிடைக்கும் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். துங்கபத்ரா தண்ணீர் விவகாரத்தைப் போலவே, மேகதாது பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று, தான் நம்புவதாக சிவக்குமார் கூறியுள்ளார்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
Jul 26, 2026 12:58 PM IST
.png)







English (US) ·