பீஜிங், மே10- சீனாவில், ஊழலுக்கு எதிராக அதிபர் ஷீ ஜின்பிங் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜின்பிங், 2012ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து ராணுவத்திலும் அரசியலிலும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்நிலையில், 2018 – 2023 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்த வேய் பெங்ஹே, அவ ருக்கு பின் பதவியேற்ற லி ஷாங்பு ஆகிய இருவருக்கும் ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வேய் பெங்ஹே மீது பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வெறும் 8 மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த லி ஷாங்பு, ராணுவத் தளவாடங்கள் வாங் கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. ஷீ ஜின்பிங்கின் ராணுவச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 2015இல் உருவாக்கப்பட்ட ராணுவத்தின் ஏவுகணை படைக்கு இருவரும் தலைமை தாங்கியுள்ளனர்.
சீன சட்டப்படி, இவர்களுக்கு, ‘நீக்கம்’ செய்யப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த இரண்டு ஆண்டுகள் இவர்களின் நன்னடத்தை கவனிக்கப்படும். அதன் பிறகு, இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் இவர்கள் சட்ட விரோதமாக சேர்த்த அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வாழ்நாள் முழுதும் இவர்கள் எந்தவொரு அரசியல் பொறுப்புகளையும் வகிக்க முடியாது.
.png)
2 hours ago
11








English (US) ·