Last Updated:May 10, 2026 6:01 PM IST
Yercaud Tourist| தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெயில் நிலவி வரும் நிலையில், ஏற்காட்டில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.

News18
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கோடை விடுமுறையை முன்னிட்டு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தினருடன் பலரும் ஏற்காட்டுக்கு வந்து சுற்றுலாவை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஏற்காடு ஏரியில் உள்ள படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் மற்றும் பசுமை புல்வெளிகளில் குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
அதேபோல் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா காட்சிமுனைகளில் இருந்து மலைகளின் இயற்கை அழகையும், சேலம் மாநகரின் அழகிய தோற்றத்தையும் ரசித்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெயில் நிலவி வரும் நிலையில், ஏற்காட்டில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “கோடை விடுமுறை என்றாலே ஏற்காடு, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு செல்ல விருப்பம் இருக்கும். அதனால் இந்த வாரம் குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு வந்தோம். இங்குள்ள குளிர்ச்சியான காலநிலை மிகவும் அருமையாக உள்ளது.
மேலும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசித்தோம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஏற்காடு வருவோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)







English (US) ·