Last Updated:Feb 21, 2026 5:18 PM IST
Rajini - Kamal | கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான அறிமுக வீடியோவை இயக்குநர் நெல்சன் தனது ஃபார்முலாவில் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினி - கமல் இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பது சாத்தியமா? அப்படி நடித்தால் அந்தப் படம் எப்படி இருக்கும்? என்பதைப் போன்ற ரசிகர்களின் நீண்டகால ஆசைக்கு பதில் கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், அதன் பிறகு மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, ஆடுபுலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களிலும் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.
ஒரே படத்தில் இருவரும் இணைந்து நடித்தாலும், ஒவ்வொருவருக்கும் தனி பாணி இருந்தது. வில்லனாக நடித்தாலும் ஸ்டைல், மேனரிசம் என அசத்தினார் ரஜினி. இதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உருவாக, இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தனர். அதன்படி, நினைத்தாலே இனிக்கும் படம் அவர்கள் இணைந்து நடித்த கடைசி படமாக அமைந்தது. அந்த முடிவால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நின்றார் ரஜினிகாந்த்.
இதன் பிறகு, கே.பாலச்சந்தரின் 'தில்லு முல்லு' படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் திரையில் தோன்றினாலும், இருவரும் இணைந்த படமாக அது பேசப்படவில்லை. காலங்கள் ஓட, கடந்த 45 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்காத சூழலில், இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை பற்றிக்கொண்டது. இந்த எதிர்பார்ப்புக்கு தீனிப்போடும் விதமாக ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாக, எதிர்பார்ப்பு எகிறியது.
இயக்குநர்களின் பட்டியலில் விருப்பமான நெல்சனை டிக் செய்த ரஜினி, தன்னுடைய செல்ல இசையமைப்பாளர் அனிருத்தையும் ஓகே செய்துள்ளார். இந்நிலையில், நெல்சனின் வழக்கமான டார்க் ஹூமர் காமெடியுடன் உருவாகியுள்ள ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினால் ஏற்படும் ஈகோ பிரச்னைகளை, தனது பாணியில் நக்கல் கலந்து காட்சிப்படுத்தியுள்ளார் நெல்சன்.
கார் சாவியை தூக்கிப் போட்டு, ரஜினி ஸ்டைலாக நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், யார் ஹீரோ என்ற கேள்வி வலுத்துள்ளது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள இப்படத்தில் யார் ஹீரோ...? யார் வில்லன்...? சக நடிகர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் போகப் போகத் தெரியவரும்.

இந்தியா - பிரேசில் இடையிலான வர்த்தகம்.. பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
இந்திய-பிரேசில் வர்த்தகம் ஐந்து ஆண்டுகளில் 1.80 லட்சம் கோடிக்கு உயர்த்த திட்டம் அறிவிக்கப்பட்டது
செயற்கை நுண்ணறிவு, சூப்பர் கம்ப்யூட்டர், செமிகண்டக்டர், பிளாக்செயின் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் கையெழுத்து
அரிய வகை கனிமங்கள், சுரங்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
.png)







English (US) ·