தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.
15

Image Credit : youtube
Rajini Kamal Reunion Movie Promo
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் சமகாலத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்ஹாசன். இவர்கள் இருவரின் குருநாதரும் கே பாலச்சந்தர் தான். இதனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் பேசி முடிவெடுத்து இணைந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தனர். அவர்கள் அந்த முடிவெடுத்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.
25
Image Credit : youtube
இணைந்து நடிக்கும் ரஜினி - கமல்
இந்த நிலையில், 47 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் மீண்டும் ரஜினியும் கமலும் ஒன்றாக நடிக்க இருக்கிறார்கள். அப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியாக இது அமைந்திருப்பதால், அப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை அனிருத் ஏற்றிருக்கிறார். இந்த படத்திற்காக பிரத்யேக புரோமோ ஷூட்டையும் நடத்தி இருக்கிறார் நெல்சன். இதற்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் நெல்சன். இந்த புரோமோ வீடியோ தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
35
Image Credit : youtube
புரோமோ வெளியீடு
அதில், நெல்சன், ரஜினி, கமல் இருவரின் ரூமுக்கு வெளியே நின்றுகொண்டு முதலில் யாரை சந்திக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்க, அப்போது அந்த வழியாக வந்த அனிருத், இரண்டு விரலை காட்டி எதாச்சும் ஒன்னை தொடுங்க என சொல்ல, நெல்சனும் ஒரு விரலை தொட்டதும், தான் எந்த ராகத்தில் இசையமைக்கலாம் என்பதற்காக உன்னிடம் கேட்டதாக சொல்லிவிட்டு செல்கிறார். நெல்சனும் அதே ஃபார்முலாவை பாலோ பண்ணி, இரண்டில் ஒரு விரலை தேர்வு செய்து முதலில் கமலின் அறைக்கு செல்கிறார். அங்கு சென்று அவர் ஒரு கோர்ட் சூட்டை எடுக்கப்போகையில், ரஜினி சாரும் அதே தான் எடுத்திருக்கிறார் என்று சொன்னதும், சட்டென கமல் வேறு ஒரு கோர்ட்டை எடுக்கிறார்.
45
Image Credit : youtube
யாரு ஹீரோ?
அதேபோல் ரஜினியை நெல்சன் சந்திக்கும் போது கமல் சார் இந்த ஷூவை எடுத்திருக்கிறார் என்று சொன்னதும், ரஜினி வேறொரு ஷூவை தேர்வு செய்கிறார். இப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரும் புதிருமான முடிவை எடுக்கிறார்கள். அதன்பின்னர் ஸ்டைலாக நடந்து வந்து காரில் ஏறுகிறார்கள். ஏறியதும் நெல்சனிடம் யார் ஹீரோ என கேட்கிறார் கமல். அருகில் இருக்கும் ரஜினியும் தன் பங்கிற்கு, கேக்குறாங்கள்ல சொல்லுங்க ஜீ யாரு ஹீரோ என கேட்கிறார். நெல்சன் பதில் சொல்வதற்குள் கமல் வேகமாக காரை எடுத்து கிளம்புகிறார். இப்படி புரோமோவிலேயே ட்விஸ்ட் வைத்து நெல்சன் செம ட்ரீட் கொடுத்துள்ளார். இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள். இப்படம் கன்ஃபார்ம் 1000 கோடி வசூல் செய்யும் என கூறி வருகின்றனர்.
55
Image Credit : youtube
ரஜினி - கமல் லைன் அப்
இந்தப் படம் தவிர்த்து நடிகர் ரஜினிகாந்த் கைவசம் ஜெயிலர் 2 மற்றும் தலைவர் 173 ஆகிய படங்கள் உள்ளன. அதில் ஜெயிலர் 2 படத்தை நெல்சனும், தலைவர் 173 படத்தை சிபி சக்கரவர்த்தியும் இயக்குகிறார்கள். ஜெயிலர் 2 திரைப்படம் ஷூட்டிங் முடிந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அதேவேளையில் தலைவர் 173 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தலைவர் 173 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதுதவிர நடிகர் கமல்ஹாசனும் தன் கைவசம் கல்கி 2, இந்தியன் 3, அன்பறிவு இயக்கும் படம் ஆகியவற்றை கைவசம் வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
.png)
2 hours ago
16






English (US) ·