Last Updated:Mar 10, 2026 6:47 PM IST
சிறப்பும் கண்ணியமும் வாய்ந்த இரவாக குறிப்பிடப்படும் லைலத்துல் கத்ர் இஸ்லாமியர்களின் புனித இரவாகும். இந்த இரவில்தான் இறைத்தூதர் முகம்மது நபிக்கு குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டன.

சிறப்பும் கண்ணியமும் வாய்ந்த இரவாக குறிப்பிடப்படும் லைலத்துல் கத்ர் இஸ்லாமியர்களின் புனித இரவாகும். இந்த இரவில்தான் இறைத்தூதர் முகம்மது நபிக்கு குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டன. அதனால் தான் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் வரக்கூடிய இந்த லைலத்துல் கத்ர் மகத்துவமிக்க இரவாக கருதப்படுகிறது.
இந்த லைலத்துல் கத்ர் இரவில் தான் வானவர்களின் சிறப்பு வருகை நடக்கிறது. வானவர்களுடன் அவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் வருகிறார்கள். இந்த இரவில் அமைதி நிலவும் என்றும் அது அதிகாலை வரை நீடித்திருக்கும் எனவும், இந்த இரவில் மேற்கொள்ளும் வழிபாடானது பாவங்களில் இருந்தும் விடுதலை தரக்கூடிய இரவாக இருக்கிறது.
இது குறித்து ஹஜரத் சலாவுதீன் கூறும் போது லைலத்துல் கத்ரை ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் தேட வேண்டும். ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள் என நபிகள் நாயகம் கூறினார்கள்.
அதிலும், ஒற்றைப் படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் தேட வேண்டும். இந்த லைலத்துல் கத்ர் இரவில் இஸ்லாமிய மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இரவு முழுவதும் தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. அதாவது, ஆயிரம் மாதங்கள் ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்டுப் பெறுகிற நன்மைகளைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை இந்த ஓர் இரவின் மேற்கொள்ளும் வழிபாட்டின் மூலம் பெற முடியும்.இந்த இரவில் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தூக்கத்தை துறந்து இரவு முழுவதும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள் என கூறினார்.

டன் கணக்கில் சிக்கிய வாளை மீன்... அலேக்காக தட்டி தூக்கிய பாம்பன் மீனவர்கள் !
பாம்பன் துறைமுகத்தில் மீனவர்கள் ஒவ்வொரு விசைப்படகிலும் இரண்டு டன் வாளை மீன் பிடித்தனர்
வாளை மீன் கிலோ ரூ.30 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
பாம்பன் மீன் இறக்குதளம் பரபரப்பாக காணப்பட்டு, தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளுக்கும் மீன் அனுப்பப்பட்டது
.png)








English (US) ·