Last Updated:October 15, 2025 4:11 PM IST
அனைத்து ரயில் சேவைகளும் ஒரே செயலில் பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட "ரயில் ஒன் செயலில்" ஓடிடி தளங்களை அறிமுகம் செய்து திரைப்படம், வெப்சீரியஸ் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் " செயலியானது முன்பதிவு பயண சீட்டு பெற, ரயில் கால அட்டவணை அறிந்து கொள்ள, முன்பதிவில்லாத பயணச்சீட்டு பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி, என்.டி.இ.எஸ், யூ.டி.எஸ் மொபைல் என தனித்தனி செயலிகள் பயன்பாட்டில் இருந்து வந்ததில் அனைத்தும் ஒருங்கிணைத்து ரயில் பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரே செயலியாகும்.
இந்த செயலியின் மூலம் டிக்கெட் முன்பதிவு பயண சீட்டு, தட்கல் பயண சீட்டு, முன்பதிவு இல்லாத பயண சீட்டு, நடைமேடை அனுமதி சீட்டு, சீசன் டிக்கெட், ரயில் கால அட்டவனை, இரு ரயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்படும். ரயில்களின் விபரம், ரயில் கடக்கும் இடம், ரயில் நிலையத்தில் வந்து போகும் ரயில்கள் விபரம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், ரயிலில் அல்லது ரயில் நிலையத்திலிருந்து காலை, மதிய, இரவு உணவுகளை ஏற்பாடு செய்து கொள்வது, ரயில் பயணக் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு பதிவது, பயண சீட்டு பதிவிற்க்கான மின்னணு பண பரிமாற்றத்திற்கு ஆர்-வாலட்டில் பணம் சேமித்துக் கொள்வது, "ரயில் மதாத்"தில் குறைகளை பதிவு செய்வது, செயலி செயல்பாடு பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த செயலியில் 'கோ டூ வேவ்ஸ்' என்ற பகுதிக்கு சென்று ஓ.டி.டி. தளத்தில் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றை ரயில் பயணத்தின் போது பார்க்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், வருங்காலத்தில் பயணிகள் ரயிலில் பார்சல் பதிவு செய்வது, சரக்கு ரயில்களில் சரக்கு பதிவு செய்வது போன்ற வசதிகளும் மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

'ரயில் ஒன்' செயலி: டிக்கெட், ஓடிடி, உணவு அனைத்தும் ஒரே இடத்தில் !
ரயில் ஒன் செயலி மூலம் ரயில் பயண சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
ரயில் ஒன் செயலியில் ஓடிடி தளங்களில் திரைப்படம், வெப்சீரியஸ் பார்க்கும் வசதி உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.