
புதுடெல்லி: டிசம்பர் 20-
அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின் எஞ்சின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒரு யானைக்குட்டி மட்டும் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மிசோரமின் சாய்ரங்கில் இருந்து, டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலை நோக்கி, நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கவுகாத்தியிலிருந்து, சுமார் 126 கி.மீ தூரத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிகாலை 2.17 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சில யானைகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன. ஓரிரு யானைகள் ரயிலின் அடியில் சிக்கியது. இப்படியாக மொத்தம் 8 யானைகள் பலியாகின. விபத்தும் மீட்பும் விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன், ரயில்வே துறையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். யானை மீது மோதிய வேகத்தில் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 8 யானைகள் உயிரிழந்திருக்கிறது என்பதை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். யானைகளின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறியுள்ளது. அதை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் வடகிழக்கு பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபத்து தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் யானைகளை பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் ரயில் மோதிய வேகத்தில் யானைகள் உயிரிழந்திருக்கின்றன என ரயில்வேதுறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
.png)
1 day ago
1




English (US) ·