இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் கார்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 2025 நவம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்களின்படி, நிறுவனம் அதிகம் விற்பனையான மாடலாக ரெனால்ட் Triber உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்த 2,064 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டு அடிப்படையில் 38.90 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,486 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் டிரைபர் விற்பனை
மொத்த ரெனால்ட் விற்பனையில் டிரைபர் மட்டும் 56.36 சதவீத பங்கை பெற்றுள்ளது. விற்பனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரெனால்ட் Kiger உள்ளது. நவம்பர் 2025-ல் இந்த கார் 1,151 யூனிட்கள் விற்பனையாகி, 47.75 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 779 யூனிட்களாக இருந்தது. நகர்ப்புறம் மற்றும் இளம் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் இந்த கைகர் மாடல், ரெனால்ட் விற்பனைக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
.png)
17 hours ago
14






English (US) ·