லெங்கோக் பாரு அண்டை வீட்டாரைக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 hour ago 10

db9d55dd-e458-4c76-b851-fba121909df4

லெங்கோக் பாரு புளோக் 55ன் 16வது மாடியில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் காணப்பட்ட காவல்துறையினர். - படம்: எஸ்பிஎச் மீடியா

Man charged with killing neighbour in Lengkok Baru

Ng Siew Seng, 59, has been charged with the murder of 59-year-old Thiagarajan Karunakaran following a neighbourhood dispute. The incident occurred on Monday, July 20, at Lengkok Bahru's Block 55, where Thiagarajan was found motionless and later pronounced dead. Ng, who stated he acts against noise, attended court via video link. Neighbours confirmed the two men, living on the 16th floor, frequently argued. Ng faces capital punishment if convicted. The case will be heard again on August 12.

Generated by AI

லெங்கோக் பாரு அண்டை வீட்டுத் தகராறில் சண்டையில் 59 வயது ஆடவர் மீது புதன்கிழமை (ஜூலை 22) கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளியான இங் சுவீ செங் காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார். 59 வயது தியாகராஜன் கருணாகரனைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

“சத்தத்தைக் கேட்டால் நான் பொதுமக்களைத் திட்டுவேன். ஒரு குரலைக் கேட்டதால் அதற்கு எதிராக நடந்துகொண்டேன்,” என்று நீதிமன்றத்தில் இங் கூறினார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்நோக்குவார்.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) லெங்கோக் பாருவில் ரெட்ஹில் ரோடு அருகே உள்ள புளோக் 55ல் நடைபெற்ற சம்பவம் குறித்து அன்று மாலை 5 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை இதற்கு முன்னர் கூறியிருந்தது.

அந்த புளோக்கின் 16வது மாடியின் மின்தூக்கி வளாகத்தில் தியாகராஜன் அசைவற்றுக் கிடந்ததைத் தாங்கள் கண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

மறுநாளான செவ்வாய்க்கிழமை சம்பவம் நிகழ்ந்த புளோக்கிற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றபோது 16வது மாடியின் நடைபாதையில் ரத்தக்கறைகளைக் கண்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய இரு ஆடவர்களும் 16வது மாடியில் சில வீடுகள் தள்ளி வசித்து வந்ததாக அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஆனால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

Read Entire Article