வரலாற்றில் இல்லாத வகையில் முட்டை விலை உயர்வு... என்ன காரணம் தெரியுமா.

23 hours ago 21

Last Updated:Dec 20, 2025 10:53 PM IST

தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

முட்டை விலை
முட்டை விலை

முட்டை கொள்முதல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் நிலையில், சில்லரை விற்பனையிலும் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.  கடந்த ஒரு வாரமாக ஏறு முகத்தில் இருக்கும் முட்டை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் கொள்முதல் விலை, 6 ரூபாய் 25 காசுகளில் இருந்து, 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வரலாற்றில் இல்லாத வகையில் முட்டை விலை உயர்ந்துள்ள நிலையில், சில்லரை விற்பனையில் ஏற்கெனவே ஒரு முட்டையின் விலை குறைந்தபட்சமாக 7 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ளதால் கேக் தயாரிப்புக்காக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

First Published :

Dec 20, 2025 10:53 PM IST

Read Entire Article