Last Updated:Feb 07, 2026 4:43 PM IST
"தீர்க்கமான சிந்தனையோ, பக்குவமோ, அரசியல் தெளிவோ இல்லாதவர் விஜய்" என ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் பாஜக சார்பில் மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் துவக்க விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாரின் திருவுருவ சபைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராம சீனிவாசன், “விளாத்திகுளம் தொகுதியில் பல ஆண்டுகளாக இரண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஒன்று விளாத்திகுளம், குளத்தூர், புதூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி ரயில் தடம் வேண்டும்.
பம்பை - அச்சன்கோயில் - வைப்பார் நதியணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். நதியணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. தொழிற்சாலைக்கான நீர் ஆதாரம், விவசாயத்திற்கான நீர் ஆதாரம் கிடைக்கும். இந்த இரண்டு திட்டத்திற்கும் திமுக அரசு முனைப்பு காட்டவில்லை. ஆற்றில் எவ்வாறு மணல் அள்ளுவது என்பது குறித்து முனைப்பு காட்டுகிறது.
எங்கள் முதலமைச்சர் எடப்பாடி இருந்து வழி காட்டுவார் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். எங்களுக்கான வழிகாட்டுதல் மோடி மற்றும் அமித்ஷாவிடம் இருந்து வரும். கூட்டணியாக சேர்ந்து தேர்தலை சந்திப்போம். எங்கள் கூட்டணியில் டிடிவி, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கூட்டணியில் மேலும் பல முக்கிய கட்சிகள் வருவார்கள்.
விஜய் விசில் சின்னம் வாங்கி விட்டார், முதலில் டிடிவி காங்கிரஸ் கட்சியினர் கூட வருவார்கள் என்று நினைத்தார். குக்கரில் விசில் இருக்கும் என்று நினைத்தார். தனக்கு முன்னாள் இருப்பவர்கள் கைதட்டுவதற்காக பேசும் அரசியல் தான் விஜய் அரசியல். அதைத் தாண்டி தீர்க்கமான சிந்தனையோ, பக்குவமோ, அரசியல் தெளிவோ இல்லாதவர்.
தமிழ்நாட்டைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாதவர் விஜய். அரசியல் திட்டங்கள் பற்றி விஜய்க்கு ஒன்றும் தெரியாது. ரசிகர்களை மட்டும் வைத்து கட்சியை நிர்மாணிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு விஜய் கட்சி அரசியல் எதுவும் இருக்காது. ஓ.பன்னீர்செல்வம், பாஜக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” என தெரிவித்தார்.
.png)






English (US) ·