விஜய்யை அரியணையில் ஏற்றிய 'தளபதி'... தமிழக அமைச்சரவையின் 2-வது தூண் - வெற்றியை வசமாக்கிய ஆனந்த்! | TVK

59 minutes ago 9

Last Updated:May 11, 2026 9:11 AM IST

TVK | நடிகராக இருந்த விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னால் முக்கிய நபர்களில் ஒருவராக அமைச்சர் என். ஆனந்த் உள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் 2வது நிலையில் அமைச்சராக உள்ள தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் யார்?.

 புதுச்சேரியின் புஸ்ஸி என்ற தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் புஸ்சி ஆனந்த் என்ற அடைமொழியை பெற்றவர் ஆனந்த். தொடக்கத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் கவுரவ தலைவராக அவரை விஜய்யின் தந்தை சந்திரசேகர் நியமித்தார்.

 இதைத் தொடர்ந்து ரசிகர் மன்ற தலைவர் ஆன ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தின் அகில உலக தலைவராக பொறுப்பேற்றார். தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி அதற்கு பொறுப்பாளர்களை நியமித்தார் ஆனந்த். இச்சூழலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கியபோது, அதன் பொதுச்செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார்.

 கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும், கட்சி மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்துவதிலும் ஆனந்தின் பங்கு அளப்பரியது. "எங்கள் தலைவர் விஜய் நிச்சயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார்" என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில் ஆனந்த் சூளுரைத்தபோது அவரை அன்று பலரும் ஏளனமாகவே பார்த்தார்கள்.

 அவர்களை எல்லாம் இன்று வாயடைத்து நிற்கச்செய்துள்ளார் ஆனந்த். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில் தொடங்கி நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்ச்சி வரை கடந்த 2 ஆண்டுகளாக தவெக சார்பில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சியிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் அக்கட்சித் தலைவர் விஜய்யை மட்டுமே அவர் முன்னிலைப்படுத்தி வந்தார்.

 தவெக வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்த ஆனந்த், தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது வாக்கை புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றிக் கொண்டார்.

 இதையடுத்து தவெக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட ஆனந்த், 51 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மாறி மாறிச் சென்ற தியாகராய நகர் தொகுதியை ஆனந்த் கைப்பற்றியது அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 ஆனந்தின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய், தனது தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு அடுத்து 2வது இடத்தில் அமர்த்தி கவுரப்படுத்தியுள்ளார். நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் பணபலம் மிக்க பாரம்பரிய கட்சிகளை ஓரங்கட்டி, "விசில்" சின்னத்தில் வெற்றி பெற்ற ஆனந்த் இரு மாநிலங்களில் இருந்தும் எம்எல்ஏவானவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். பொதுச்செயலாளராக தவெகவை திறம்பட வழிநடத்தி அக்கட்சியை ஆட்சியில் அமர வைத்த ஆனந்த், தமிழ்நாட்டின் அமைச்சராக எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஹோட்டலில் துண்டுகள், பெட்ஷீட்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளன? காரணம் தெரியுமா?

ஹோட்டலில் துண்டுகள் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன?

  • ஹோட்டல் துணிகள் வெண்மையாக இருக்க வெந்நீர், வினிகர் பயன்படுத்தப்படுகின்றன.

  • பெரிய தொழில்துறை இயந்திரங்களில் துணிகள் துவைக்கப்படுகிறது.

  • உயர்தர எகிப்தியன் காட்டன் துணிகள் பயன்படுத்தப்படுகிறது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article