வீட்டிலேயே பாதாம் வளர்க்க ரெடியா.? - தோட்டக்கலை நிபுணர்கள் சொல்லும் ட்ரிக் தெரிஞ்சிகோங்க...

54 minutes ago 8

Last Updated:May 14, 2026 4:37 PM IST

Almond Tree| சரியான விதை மற்றும் பராமரிப்புடன் வீட்டுத் தோட்டத்தில் பாதாம் செடியை ஆரோக்கியமாக வளர்க்கலாம்.

பாதாம் செடி வீட்டிலேயே வளர்ப்பது எப்படி

உடலுக்கு பல நன்மைகள் தரும் பாதாம்பருப்பை வீட்டிலேயே செடியாக வளர்க்க முடியும். சரியான விதை தேர்வு மற்றும் முறையான பராமரிப்பு செய்தால், பாதாம் செடி ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும் என தோட்டக்கலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம் செடி வீட்டிலேயே வளர்ப்பது எப்படி

முதலில், நல்ல தரமான, வறுக்காத மற்றும் உப்பு சேர்க்காத பாதாம்பருப்பை விதையாக தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த விதைகளை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, ஈரமான துணியில் 3 முதல் 5 நாட்கள் வரை வைத்தால் முளைக்க தொடங்கும். முளை வந்த விதைகளை உடனே மண்ணில் நட்டால் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

பாதாம் செடி வீட்டிலேயே வளர்ப்பது எப்படி

அதன்பிறகு, செம்மண், மணல் மற்றும் இயற்கை உரம் கலந்து தயாரித்த மண்ணில் முளைத்த விதையை சுமார் 2 அங்குல ஆழத்தில் நட்டு விட வேண்டும். தினமும் அளவான தண்ணீர் தெளித்தால் செடி நன்றாக வளர ஆரம்பிக்கும். ஆரம்ப நாட்களில் சிறிய தொட்டியில் வளர்த்து, பின்னர் பெரிய தொட்டிக்கு மாற்றினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். பாதாம் செடிக்கு போதுமான வெயில் மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் வெயில் கிடைக்கும் இடத்தில் வைத்தால் செடி ஆரோக்கியமாக வளரும். வாரத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் கொடுத்தால் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். அதே நேரத்தில் அதிகளவு தண்ணீர் ஊற்றாமல் கவனமாக பராமரிக்க வேண்டும்.

பாதாம் செடி வீட்டிலேயே வளர்ப்பது எப்படி

மேலும், பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேப்பெண்ணெய் கலந்த தண்ணீரை அவ்வப்போது தெளிக்கலாம். இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என்றும் தோட்டக்கலை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.சரியான பராமரிப்பு செய்தால், பாதாம் செடி சில ஆண்டுகளில் சிறிய மரமாக வளர வாய்ப்பு இருப்பதாகவும், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க ஏற்ற பயனுள்ள செடிகளில் இதுவும் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

EPFO | மாத சம்பளதாரர்களுக்கு ஜாக்பாட்.. பிஎஃப் பணம் எடுக்க இனி அலைய வேண்டாம்.. வந்தாச்சு புது அப்டேட்!

PF பணம் எடுக்க இனி அலைய வேண்டாம்.. வந்தாச்சு புது அப்டேட்!

  • EPFO புதிய அமைப்பில் PF பணம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.

  • PF கோரிக்கைகள் தானாகவே தீர்க்கப்பட்டு 7 கோடி பேர் பயனடைவார்கள்.

  • வேலை மாற்றும் போது பழைய PF கணக்கு தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றப்படும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article