
மும்பை: பிப்ரவரி 7-
ரஷ்யாவுக்கு பதிலாக வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனால் ரூ.27,000 கோடி வரை அதாவது 300 கோடி டாலர் வரை சேமிக்க முடியும் என எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும் நிலையில் அதில் முக்கியமாக வெனிசுலா கச்சா எண்ணெய் மூலமாக கிடைக்கும் ஆதாயம் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம், இந்தியா ஆண்டுக்கு 300 கோடி டாலரை மிச்சப்படுத்த முடியும்.ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதைக் குறைத்து, வெனிசுலாவிலிருந்து ‘மெரி 16’ வகை கனரக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா இந்தச் சேமிப்பை செய்வது சாத்தியமாகும்.20 டாலர் தள்ளுபடி: வெனிசுலா எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இது உள்நாட்டுப் பணவீக்கத்தைப் பாதிக்காமல், ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி நிறுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பையும் ஈடுசெய்ய உதவும்.சாதகமான அம்சம்: அமெரிக்கா விதித்துள்ள வரிக் குறைப்பு, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதித் திறன் அதிகரிப்பு, பணவீக்கக் கட்டுப்பாடு போன்றவை இந்தியப் பொருளாதாரத்திற்குச் சாதகமான அம்சங்களாக உள்ளன.உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 30 சதவீதத்தைத் தாண்டியது. தற்போது வெனிசுலா, ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 40 நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.அதே வேளையில், விவசாயம் மற்றும் பால் பண்ணை போன்ற முக்கிய உள்நாட்டு தொழில் துறைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. குறிப்பாக, இந்திய விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பால் உற்பத்தித் துறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வர்த்தக தாராளமயமாக்கல் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதித் திறனை வலுப்படுத்துவதுடன், எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இவ்வாறு எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)
21 hours ago
20






English (US) ·