வெறும் 10 ரூபாயில் முழு உடலையும் சுத்தம் செய்யலாம்... கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்...

20 hours ago 15

Last Updated:May 12, 2026 11:06 AM IST

வெறும் 10 ரூபாயில் தயாரிக்கப்படும் கொத்தமல்லி ஜூஸ் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கொத்தமல்லி ஜூஸ் மருத்துவ பலன்கள்

அன்றாட சமையலில் தவறாமல் இடம்பெறும் கொத்தமல்லி தழை, உணவிற்கு மணமும் சுவையும் அளிப்பதுடன் உடல்நலத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, கொத்தமல்லி இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், குறைந்த செலவில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இயற்கை பானமாக கருதப்படுகிறது.

கொத்தமல்லி ஜூஸ் மருத்துவ குறிப்புகள்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. இதற்காக பலர் அதிக செலவில் ஆரோக்கிய பானங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் கொத்தமல்லி இலைகள் வெறும் 10 ரூபாயில் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் இயற்கை மருந்தாக திகழ்கின்றன.

சித்த மருத்துவ குறிப்புகள்

கொத்தமல்லி ஜூஸ் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக கோடைகாலத்தில் இந்த ஜூஸை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளித்து சோர்வை குறைக்க உதவுகிறது.

கொத்தமல்லி ஜூஸ் மருத்துவ குறிப்புகள்

மேலும், கொத்தமல்லி ஜூஸ் செரிமானத்தை சீராக்கும் தன்மை கொண்டது. வயிற்றுப் பெருக்கு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை குறைக்க இது உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் இந்த பானம் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளும் மருத்துவர் ஆலோசனையுடன் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல், தோல் பொலிவை அதிகரிக்கவும், தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் கொத்தமல்லி ஜூஸ் உதவுகிறது.

கொத்தமல்லி ஜூஸ் மருத்துவ குறிப்புகள்

கொத்தமல்லி ஜூஸ் தயாரிப்பதும் மிகவும் எளிது. ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை நன்றாக கழுவி, சிறிதளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்தால் ஆரோக்கியமான ஜூஸ் தயார். தினமும் காலை நேரத்தில் இதை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என கூறப்படுகிறது. குறைந்த செலவில் அதிக நன்மைகளை தரும் இந்த இயற்கை பானத்தை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல தேர்வாக இருக்கும்.

GNWL vs TQWL... எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்? பலருக்கும் தெரியாத தகவல்! | Indian Railways

GNWL vs TQWL.. எந்த ரயில் டிக்கெட் முதலில் கன்ஃபார்ம் ஆகும்?

  • காத்திருப்புப் பட்டியலில் GNWL டிக்கெட்டுகள் முதலில் உறுதி செய்யப்படவாய்ப்பு.

  • GNWL-ல் பொது பிரிவில் ரத்து வாய்ப்பு அதிகம் என்பதால் உறுதி சாத்தியம் உயரும்.

  • TQWL தட்கல் டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்பேகிடைப்பதால் உறுதி வாய்ப்பு குறைவு.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article