மும்பை, பிப். 7- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்தில் இன்று அமெரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்​கடே மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் நடப்பு சாம்​பியன் அணி​யாக திகழும் எந்த அணி​யும் பட்​டத்தை தக்​க​வைத்​தது இல்​லை. இந்த வரலாற்றை இம்​முறை இந்​திய அணி திருத்தி எழுதக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஏனெனில் உலகத் தரவரிசை​யில் முதலிடத்​தில் இந்​திய அணி பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்​சில் வலு​வாக திகழ்​கிறது. கடந்த உலகக் கோப்​பை​யில் அணி​யின் தூண்​களாக திகழ்ந்த ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் இம்முறை இல்​லா​விட்​டாலும் அணி​யின் பலத்​தில் எந்​த​வித குறை​வும் இல்​லாமல் உள்​ளது. இதற்கு சாட்​சி​யாக 2024-ம் ஆண்டு நடை​பெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் நடை​பெற்ற 9 டி20 தொடர்​களை இந்​தியா வென்​றுள்​ளது. இதில் ஆசியக் கோப்பை தொடரும் அடங்​கும். பேட்​டிங்​கில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, ரிங்கு சிங் ஆகியோர் அதிரடி​யில் மிரட்​டக்​ கூடியவர்களாக திகழ்​கின்​றனர். ஆல்​ர​வுண்​டர்​களாக ஹர்​திக் பாண்​டி​யா, அக்​சர் படேல், ஷிவம் துபே ஆகியோர் பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்​சில் ஆட்டத்​தின் எந்த தருணத்​தி​லும் கைகொடுக்​கக்​கூடியவர்கள். பிர​தான பந்​து​வீச்​சாளர்​களான ஜஸ்​பிரீத் பும்ரா, அர்​ஷ்தீப் சிங், வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ் ஆகியோ​ரும் அசத்த காத்​திருக்​கின்​றனர்.அமெரிக்கா அணி கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் முன்​னாள் சாம்​பிய​னான பாகிஸ்​தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​திருந்​தது. மேலும் அந்​தத் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இந்​தி​யா​வுக்​கும் சவால்விடுத்​தது. அமெரிக்க அணி​யில் உள்ள ஷுபம் ரஞ்​சனே, ஹர்​மீத் சிங், சவுரப் நேத்​ர​வல்​கர் ஆகியோர் தங்​களது இளமைக் காலங்களில் மும்பை அணிக்​காக உள்​ளூர் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளனர். அந்த அனுபவம் அவர்​களுக்கு கைகொடுக்​கக்​கூடும். கடந்த ஆண்டு நடை​பெற்ற 9 டி20 ஆட்​டங்​களில் அமெரிக்க அணி 8-ல் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடருக்​காக இலங்​கை​யில் 3 வார​காலம் சிறப்பு பயிற்​சிகளை மேற்​கொண்​டது. பேட்​டிங்​கில் கேப்​டன் மோனங்க் படேல், சைதேஜா முக்கமல்​லா, மிலிந்த்​ குமார்​ ஆகியோர்​ பலம்​ சேர்​க்​கக்​கூடும்​.