துபாய்: ஜூலை 23-
சவூதி அரேபியா வழி​யாக இந்​தி​யாவை நோக்கி வந்​து​கொண்​டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈ​ரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி​யாளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக நடு​வழி​யிலேயே திரும்​பிச் சென்​றன.
ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள், காசா போருக்கு எதிர்ப்பு தெரி​வித்து செங்​கடல் மற்​றும் பாப்​-எல்​-மந்​தீப் ஜலசந்தி வழியே செல்​லும் சர்​வ​தேச வர்த்​தகக் கப்​பல்​கள் மீது தொடர் தாக்​குதல்​களை நடத்தி வரு​கின்​றனர்.
அமெரிக்கா மற்​றும் மேலை​ நாடு​களுக்​குச் சொந்​த​மான கப்பல்கள் மட்​டுமின்​றி, சவூதி அரேபி​யா​வின் முக்​கிய எண்​ணெய் வர்த்​தகப் பாதைகளை​யும் முடக்​கும் வகை​யில் தங்​களின் தாக்குதல் எல்​லைகளை அவர்​கள் விரிவுபடுத்​தி​யுள்​ளனர்.
இந்த நிலை​யில்​தான், இந்​தி​யாவை நோக்கி அத்​தி​யா​வசி​யப் பொருட்கள் மற்​றும் எரிபொருட்​களை ஏற்றி வந்த 2 முக்​கிய வணிகக் கப்​பல்​கள், செங்​கடலின் ஆபத்​தான பகு​தியை நெருங்​கிய​போது ஹவுதி அமைப்​பின் அதி​காரப்​பூர்வ எச்​சரிக்​கைச் செய்தி அவற்​றுக்கு கிடைத்​தது.
சவூதி அரேபி​யா​வின் எண்​ணெய் விநி​யோகப் பாதைகளைப் பயன்​படுத்​தும் கப்​பல்​கள் மீது எந்​நேர​மும் தாக்​குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் உறு​தி​யானதையடுத்​து, கப்​பல் மாலுமிகள் மற்​றும் உரிமை​யாளர்​கள் பாது​காப்​பைக் கருத்​தில் கொண்​டு, பாதையை மாற்றி புறப்​பட்ட இடத்​திற்கே ‘யு-டர்ன்’ அடித்​துத் திரும்​பிச் செல்ல முடி​வெடுத்​தன.
வழக்​க​மாக செங்​கடல் வழி​யாக வரும் கப்​பல்​கள், ஹவுதி கிளர்ச்சி​யளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக ஆப்​பிரிக்க கண்டத்​தைச் சுற்றி (நன்​னம்​பிக்கை முனை வழியே) செல்​லும் நீண்ட பாதையைத் தேர்ந்​தெடுக்க வேண்​டிய கட்​டா​யத்​திற்​குத்​ தள்ளப்பட்​டுள்​ளன.