ஹவ்காங்கில் தீ: மருத்துவமனையில் மூவர்

1 hour ago 14

a473c761-83c1-4234-8b5f-876024d9ddf9

‘சியாவ்ஹொங்ஷு’ தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், புளோக்கின் கீழ்த்தளத்தில் கரும் புகை சூழ்ந்திருந்ததைக் காணமுடிந்தது. - படம்: ஷர்மெய்ன்/சியாவ்ஹொங்ஷு

சீனப் புத்தாண்டின் முந்தைய நாளன்று ஹவ்காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் தீ மூண்டது.

அதனைத் தொடர்ந்து, மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

திங்கட்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகல் 12.45 மணிக்கு, புளோக் 418, ஹவ்காங் அவென்யூ 8ல் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

புளோக்கின் கீழ்த்தளத்தில் உள்ள சில கட்டுமானப் பொருள்கள் தீச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக அது கூறியது.

குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தைச் சென்றடைந்ததற்கு முன்னர், காவல்துறையினரும் பொதுமக்களும் நெருப்பை அணைத்தனர்.

‘சியாவ்ஹொங்ஷு’ தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், புளோக்கின் கீழ்த்தளத்தில் கரும் புகை சூழ்ந்திருந்ததைக் காணமுடிந்தது. தீ ஏழு மாடி உயரம்வரை பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், நகர மன்றத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

Read Entire Article