Last Updated:Jul 23, 2026 9:12 PM IST
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. காதல் கதையை மையமாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை சுந்தர்.சி - குஷ்பு இணைந்து தயாரித்துள்ளனர். ரம்யா ரங்கநாதன், சைத்ரா, கெட்டிகா ஷர்மா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.
.png)






English (US) ·