இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஊபர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு இடம்பெறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
சான் ஃபிரான்சிஸ்கோ: முன்னணி வாடகை கார், உணவு விநியோகச் சேவை நிறுவனமான ஊபர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஆட்குறைப்பு செய்கிறது.
அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் 10 விழுக்காட்டினர் வேலை இழப்பர்.
நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக புளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைக் காரணம் காட்டி ஊபர் நிறுவனம் ஆட்குறைப்பு செய்வது இதுவே முதல்முறை. கடந்த ஜூன் மாதம் மனிதவளப் பிரிவில் 23 விழுக்காடு ஊழியர்களை ஊபர் ஆட்குறைப்பு செய்திருந்தது.
ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“நிறுவனத்தின் கட்டமைப்பு மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. ஏஐ தொழில்நுட்பத்தின் முழுத் திறனையும் பயன்படுத்த மறுசீரமைப்பு செய்யப்படுகிறது,” என்று நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் துணைத் தலைவர் மேகா யேத்தட்கா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ரோபோடாக்சி திட்டங்களுக்கான பொறியாளர்கள் உட்பட ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஊபர் தொடர்ந்து ஆள்களைத் தேர்வுசெய்து வருகிறது.
.png)








English (US) ·