Last Updated:Jul 23, 2026 11:52 AM IST
Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகிணி கர்ப்பமாகும் இருக்கும் செய்தியை அறிந்து பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது கனகா வீட்டிற்கு தெரியவந்தால் என்னாகும்?

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ், ரோகிணி பணத்தை வாங்கிட்டு போயிருந்தால், இந்த பிரச்சனையே வந்திருக்காது, நானும் நிம்மதியா கனகாவுடன் சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன், கடைசி நேரத்தில் இப்படி ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக சொல்லிட்டாளே, அன்னைக்கு எலி பிடிக்க வராமல் இருந்திருந்தா இவ்வளவு ஆகியிருக்காது என நினைத்து புலம்புகிறார்.
தொடர்ந்து மீனாவும் முத்துவும் மனோஜ் விஷயத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேசுகின்றனர். என்னதான் ரோகிணி தப்பு செய்திருந்தாலும் இதில் பொய் சொல்வது போன்று தோன்றவில்லை, மனோஜ் தான் பொய் சொல்கிறார். இப்போது இருக்கும் டெக்னாலிஜிக்கு டிஎன்ஏ டெஸ்ட் மூலம் குழந்தை யாருடையது என ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். அப்படி இருக்கையில் ரோகிணி பொய் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. உண்மை ஒருநாள் வெளியே வரும் என சொல்கின்றனர்.
பிறகு ஸ்ருதியும் ரவியும் ரோகிணிக்கு ஆதரவாகவே பேசுகின்றனர். ரோகிணி நிச்சயம் இதை சும்மா விடமாட்டார், விவாகரத்தும் கொடுக்க மாட்டார், இனி என்ன நடக்குமோ தெரியவில்லை என புலம்புகின்றனர்.
தொடர்ந்து வக்கீலை சந்தித்த விஜயா, எப்படியாவது உதவி செய்யுங்கள் என்று மண்டாடுகிறார். இனி இதில் எதுவுமே செய்ய முடியாது என கைவிரித்த வக்கீல் நிச்சயம் இது மனோஜ் குழந்தையாக தான் இருக்கும். அவர் முழித்த முழியே தெரிகிறது. இதனால் இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கோர்ட்டிற்கு சென்றால் அவ்வளவு தான்.
ரோகிணி என் குழந்தைக்கு இவர் தான் அப்பா என்று டிஎன்ஏ டெஸ்ட் எழுதி கொடுத்தால் வயிற்றில் இருக்கும் போதே டெஸ்ட் செய்து ரிசல்ட் வந்துவிடும். பிறகு உங்கள் சொத்தில் அந்த குழந்தைக்கு பங்கு உள்ளதாக தீர்ப்பாகிவிடும். அதே போல விவாகரத்து கேஸை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என எச்சரிக்கிறார். இதனை கேட்ட விஜயாவோ இனி ரோகிணியை எதுவுமே செய்ய முடியாதா என அச்சப்படுகிறார்.
பிறகு வேலைக்காக வந்த ரேகாவை நடுவழியில் மீனா பார்க்கிறார். இங்க என்னமா பண்ணுற என்று, வேலைக்காக இண்டர்வ்யூ வந்தேன் என சொல்ல மீனாவோ வருத்தப்படுகிறார். நல்ல பணக்கார இடத்தில் இருந்துவிட்டு இப்படி வந்து கஷ்டப்படுற என்று கேட்கவே, என்ன நீங்க இப்படி சொல்றீங்க நிறைய பெண்கள் சுயமா வேலைக்கு போய்தானே முன்னேறுகிறார்கள், நீங்களே அப்படித்தானே என்று சொல்லி இருவரும் ஒன்றாக வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
அப்போது அங்கு சிந்தாமணி வரவே நின்னா கார் நடந்தா காருனு வசதியா வாழ்ந்துட்டு இப்படி போய் ஒரு பிச்சைக்கார குடும்பத்தில போய் கஷ்டப்படுற, நடந்து போகனும்னு உனக்கு என்ன தலையெழுத்தா அவளுங்கள் எல்லாம் நல்லா பெரிய இடத்து பசங்களா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்று திட்டுகிறார்.
அதற்கு ரேகாவோ பணத்தை வைத்து எல்லாம் வாங்கலாம் சத்யாவை வாங்கமுடியாது, எனக்கு அதுவே போதும் நான் சந்தோஷமா இருக்கேன், நாங்க சந்தோஷமாக வாழ்வோம் நீ பார்க்கதான் போற என சவால் விடுகிறார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்" - நடிகர் சூர்யா வேண்டுகோள்!
தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என சூர்யா வேண்டுகோள்.
நீட் தேர்வு எதிராக மாணவர்கள் போராடும் வேளையில் கொண்டாட்டம் வேண்டாம்.
மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நடிகர் சூர்யா கோரிக்கை.
.png)








English (US) ·