புதுடில்லி, மே 12 கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதைத் தற்போதைய புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக, கள்ள நோட்டுகளை ஒழிப்ப தாகக் கூறி கொண்டு வரப்பட்ட இந்த நட வடிக்கைக்குப் பிறகு, பாஜக நீண்டகாலமாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்திலேயே அதிகள விலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
குஜராத்தில் குவியும் கள்ள நோட்டுகள் 2016 முதல் 2024 வரை யிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 638 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் என அனைத்துமே அடங்கும்.
அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையில் பாதிக்கும் மேலாக, அதாவது 335.72 கோடி ரூபாய் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மட்டுமே பிடிபட்டுள்ளது. இதன் மூலம் கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுத்ததாக மோடி அரசு கூறிக்கொள்ளும் வாதம் பொய்யாகியுள்ளது. அதிகரிக்கும் ரொக்கப் புழக்கம் பணமதிப்பிழப்பின் மற்றொரு நோக்கமாகச் சொல்லப்பட்ட ‘ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்தல்’ என்பதும் ஏட்டளவிலேயே உள்ளது.
2016 இல் 17.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பணப்புழக்கம், 2026 இல் 42.12 லட்சம் கோடி ரூபாயாக (137%) அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
முறைசாரா தொழில்களையும், சிறு குறு நிறுவனங்களையும் நிலை குலையச் செய்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு மோசமான பொருளாதார நடவடிக்கை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
.png)
13 hours ago
13





English (US) ·