Last Updated:May 11, 2026 8:06 AM IST
Free Electricity | 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் எனப் பார்க்கலாம்?

கடந்த அதிமுக ஆட்சியின் போது அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் 25 காசுகளும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை நான்கு ரூபாய் 50 காசுகளும், 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஆறு ரூபாயும், 501 முதல் 600 யூனிட் வரை 8 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை என உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது 200 யூனிட் வரை 225 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் நுகர்வோருக்கு இனி கட்டணமே இருக்காது.
300 யூனிட் வரை பயன்படுத்துவோர் 675 ரூபாய் கட்டணமாக செலுத்திய நிலையில், இனி 450 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். 400 யூனிட் பயன்படுத்தி வந்தவர்கள் இனி 900 ரூபாயும், 500 யூனிட் பயன்படுத்தியவர்கள் ஆயிரத்து 500 ரூபாயும் கட்டினால் போதுமானது.
அதேநேரத்தில் 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவசம் மட்டுமே தொடரும். அவர்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பால், ஒரு கோடி பேர் பயனடைவர் என தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி தெரிவித்தார்.
இதேபோல பொதுமக்களும் முதலமைச்சர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, முதலமைச்சரின் அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதலாக ஆண்டுக்கு ஆயிரத்து 730 கோடி ரூபாய் மானியத்தை தமிழ்நாடு அரசு வழங்கும்.

'ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க' - பிரதமர் மோடி!
கச்சா எண்ணெய் விநியோகம் பாதித்து விலை அதிகரித்துள்ளது.
அடுத்த ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் - பிரதமர் மோடி.
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு அதிக செலவு; பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
.png)







English (US) ·