சென்னை, மே 12- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராகத் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் பேசினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்று (12.5.2026) காலை கூடியது. அவைத் தலைவர் தேர்தலில் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் புதிய அவைத் தலைவரை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
துணைத் தலைவராக ரவிசங்கர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். புதிய சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துத் தெரிவித்துப் பேசினர்.
மீண்டும் ஆதரவு
அமமுக எம்எல்ஏ காமராஜ்: விஜய் அரசுக்கு முதலில் ஆதரவு தெரிவித்ததாகச் சொல்லப்பட்ட மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ், இன்று சட்டமன்றத்தில் பேசுகையில் மீண்டும் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அரசு சிறப்பாகச் செயல்பட, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். தராசு போல செயல்பட வேண்டும் – அவைத் தலைவருக்கு இதயபூர்வமாக வாழ்த்துகள்!
பழனிசாமி பேசி முடித்ததும், அதிமுக பிளவு குழுவினரால் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வேலுமணி கை உயர்த்தி வாய்ப்பு கோரினார். அவைத் தலைவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவரும் வாழ்த்திப் பேசினார்.
தேமுதிக, பிரேமலதா: சட்டமன்றத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் மக்களுக்கு தெரியும் படி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அவைத் தலைவர் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும்.
சட்டமன்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்த முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற வேண்டும்.
பா.ம.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவைத் தலைவரையும், துணைத் தலைவரையும் வாழ்த்தி உரையாற்றினர்.
.png)
14 hours ago
15





English (US) ·