டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் திரைக்கு வந்த ஸ்மால் பட்ஜெட் படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. முழுக்க முழுக்க எளிய குடும்பத்து கதையை மையபடுத்தி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி படத்தில் பிரசாந்தின் மம்மட்டியான் மற்றும் தளபதி விஜய்யின் யூத் படத்தில் இடம் பெற்ற அட ஆள்தோட்ட பூபதி பாடலின் டான்ஸ் வீடியோ ரீகிரியேஷன் செய்யப்பட்டு இடம் பெற்றிருந்தது.
கட்டுக்கட்டாக பணம், தலைகால் புரியாம ஆடும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
இந்தப் படம் மூலமாகவும் படம் ரசிகர்களை வெகுவாக சென்றடைந்தது. இந்தப் படம் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக இயக்குநர் தன்னை ஒரு ஹீரோவாக காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் புதிய படம் ஒன்றில் நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. அதுவும் 35 நாட்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தப் படத்தை மதன் இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன்னதாக லவ்வர் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அபிஷன் ஜீவந்திற்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் டிராக் பற்றிய விவரங்கள் ஒன் பை ஒன்னாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' BTS வீடியோவை ஒரு ட்விஸ்ட்டுடன் பகிர்ந்த ஷாருக், ஆர்யன் கான்