Last Updated:Feb 16, 2026 4:00 PM IST
தமிழில் பிரபலமாக இருந்த நடிகை இவர். சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அந்த நடிகையின் கணவரும் பிரபல நடிகர் தான். யார் அவர்கள்?

1978-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய 'மரோ சரித்ரா' (தெலுங்கு) படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா. தமிழில் 'தப்புத் தாளங்கள்' இவரது முதல் படமாகும். இதுதவிர, 'தண்ணீர் தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை', 'அக்னி சாட்சி', 'புதுக்கவிதை', 'நெற்றிக்கண்', 'வண்டிச்சக்கரம்' போன்றவை சரிதாவின் நடிப்புக்கு சான்றாக அமைந்த படங்கள்.
சிறந்த நடிகை மட்டுமல்லாது, ஒரு சிறந்த டப்பிங் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் இவர். சினேகா, நதியா, விஜயசாந்தி போன்ற பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கும் சரிதா, 2023ல் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
சரிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது திரையுலக வெற்றியைப் போல மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. 1988ல் புகழின் உச்சியில் இருந்தபோது சரிதா மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்து கொண்டார். தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் முகேஷ். மலையாளத்தில் இவர் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
அதோடு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவர் தனது நடிப்பு வாழ்க்கைக்கு இடைவெளி விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிக்கு ஸ்ரவண், தேஜாஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கசக்கத் தொடங்கியது. முகேஷ் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் சரிதா பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தான் கர்ப்பமாக இருந்தபோது முகேஷ் தன்னை வயிற்றில் உதைத்ததாக மிக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தனது பிரிவு பற்றி பேசிய சரிதா, முகேஷை பிரிந்ததற்கான உண்மையான காரணம் பற்றி மனம் திறந்திருக்கிறார். அதில், திரைக்கதைகளில் மட்டுமே காணக்கூடிய வன்முறைகள் தனது நிஜ வாழ்க்கையில் நிழலாடியதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
முகேஷின் தந்தை ஓ. மாதவன் மீது கொண்ட மதிப்பால், அவருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவே இத்தனை ஆண்டுகள் அமைதி காத்ததாகச் சரிதா தெரிவித்தார். தந்தையை இழந்த பிறகு, மாமனாரையே தனது தந்தையாகக் கருதியதால் காவல்துறை வரை செல்ல விரும்பவில்லை என அவர் கூறினார்.
முகேஷ் போதைக்கு அடிமையாகித் தன்னைத் தாக்கியதாகவும், பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் சரிதா குற்றம் சாட்டியுள்ளார். ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது முகேஷ் தன்னை வயிற்றில் எட்டி உதைத்த கொடுமையை விவரித்த சரிதா, இன்னொரு முறை ஹோட்டலுக்கு சென்று திரும்பும்போது காரில் ஏற விடாமல் முன்னும் பின்னும் நகர்த்தி தன்னை ஓடவிட்டு முகேஷ் வேடிக்கை பார்த்ததாக அதிர்ச்சிகர தகவலை சரிதா கண்ணீருடன் விவரித்தார்.

டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணித்த மதுபோதை இளைஞரை தாக்கிய போலீஸ்
சென்னை ரயில்வே காவலர் மதுபோதை இளைஞரை கடுமையாக தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது
டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த இளைஞரை திருவொற்றியூர் ரயில்வே காவலர் நடைமேடையில் தாக்கினார்
சம்பவம் தொடர்பாக காவலர்கள் கூறியதில், வழக்குப் பதிந்து இளைஞரை அன்றே விடுவித்ததாக தெரிவித்தனர்
.png)





English (US) ·