Ambani: 17 வகையான சுவையில் வந்தாரா ஐஸ்கிரீம்; புதிய வியாபாரத்தில் இறங்கிய ஆனந்த் அம்பானி

21 hours ago 14

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி வந்தாரா பிராண்டில் ஐஸ்கிரீம் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

Published:Just NowUpdated:Just Now

புதிய ஐஸ்கிரீம்

புதிய ஐஸ்கிரீம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது தொழிலை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்து நிர்வாகம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் எரிசக்தி மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிலை ஆனந்த் அம்பானி வசம் ஒப்படைத்து இருக்கிறார். இதையடுத்து ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தங்கி இருந்து அத்தொழிலைக் கவனித்து வருகிறார்.

அதோடு ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் மறுவாழ்வு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் இந்த விலங்குகள் மையத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகள் இருக்கின்றன.

தற்போது ஆனந்த் அம்பானி, வந்தாரா என்ற பெயரில் புதிய வகை ஐஸ்கிரீம்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறார். இதன் தொடக்க விழா மும்பையில் உள்ள ஜியோவேல்டு டிரைவ் சென்டரில் நடந்தது.

anand ambani with wife

anand ambani with wifeSOPA Images

வந்தாராவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான ஏ.ஐ வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் புலி ஒன்று வந்தாரா ஐஸ்கிரீம் வாகனத்தை ஓட்டுவது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், Vantara Creamery ஐஸ்கிரீமானது ஃபில்டர் காபி, லெமன் சர்பெட், கொய்யா மிளகாய் மற்றும் மலாய் குல்ஃபி உள்ளிட்ட 17 சுவைகளை வழங்கும் என்று அந்தப் பிராண்ட் தெரிவித்தது.

இதன் மூலம் வந்தாரா நுகர்வோர் உணவுப் பிரிவிலும் தடம் பதிக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் குளிர்பானம் தொழிலில் இறங்கி இருக்கிறது. இப்போது ஆனந்த் அம்பானி சொந்தமாக உணவு தொழிலில் இறங்கி இருக்கிறார்.

Read Entire Article