Auto: பாதுகாப்பில் கோட்டை விட்ட டொயோட்டா கார்! கிராஷ் டெஸ்ட்டில் 'ஜீரோ ஸ்டார்'! எந்த மாடல் தெரியுமா?

56 minutes ago 11

Auto: டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டார்லெட் கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் ஜீரோ ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளயுள்ளது. இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

13

கிராஷ் டெஸ்ட்டில் 'ஜீரோ ஸ்டார்' பெற்ற டொயோட்டா கார்

Image Credit : x

கிராஷ் டெஸ்ட்டில் 'ஜீரோ ஸ்டார்' பெற்ற டொயோட்டா கார்

டொயோட்டாவின் பிரபலமான ஸ்டார்லெட் கார், கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. குளோபல் NCAP நடத்திய சோதனையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஜீரோ ஸ்டார் வாங்கியுள்ளது. இந்த ஸ்டார்லெட் கார், அடிப்படையில் இந்தியாவில் பிரபலமான மாருதி பலேனோ காரை அடிப்படையாகக் கொண்டு ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும். தென்னாப்பிரிக்க சந்தைக்காக தயாரிக்கப்பட்ட இந்த மாடல், குளோபல் NCAP சோதனையில் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார் 3-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

23

டொயோட்டா ஸ்டார்லெட்

Image Credit : Google

டொயோட்டா ஸ்டார்லெட்

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இதே காரை டொயோட்டா நிறுவனம் 'Glanza' என்ற பெயரில் விற்பனை செய்கிறது. ஆனால், தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு சந்தைகளில் இது 'டொயோட்டா ஸ்டார்லெட்' என்ற பெயரில் விற்கப்படுகிறது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடலில், இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை ஸ்டாண்டர்டாக இருந்தன. ஆனால், சைடு கர்டெய்ன் ஏர்பேக்குகள் மற்றும் சைடு செஸ்ட் ஏர்பேக்குகள் இதில் இல்லை. குளோபல் NCAP அமைப்பு, காரின் கட்டமைப்பு மற்றும் பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு குறித்து பல கவலைகளைத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பலவீனம்

காரின் ஃபூட்வெல் பகுதி மற்றும் பாடி ஷெல் ஆகியவை 'உறுதியற்றவை' என்றும், அதனால் அதிக பாரத்தை தாங்க முடியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்பக்க மோதல் சோதனையில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலைக்கான பாதுகாப்பு 'சுமாராக' மதிப்பிடப்பட்டுள்ளது, மார்பு பகுதிக்கான பாதுகாப்பும் 'ஏற்றுக்கொள்ளக்கூடிய' அளவில் இருந்துள்ளது. ஆனால், டேஷ்போர்டுக்குப் பின்னால் உள்ள அபாயகரமான பாகங்களால் முழங்கால்களுக்கான பாதுகாப்பு 'பலவீனமாக' இருந்தது.

33

மோசமான ரேட்டிங்குக்கு இதுதான் காரணம்

Image Credit : x

மோசமான ரேட்டிங்குக்கு இதுதான் காரணம்

பக்கவாட்டு மோதல் சோதனையில், தலை மற்றும் மார்பு பகுதிக்கான பாதுகாப்பில் இந்த கார் மிகவும் மோசமான ரேட்டிங்கைப் பெற்றது. இதற்குக் முக்கிய காரணம், காரில் சைடு ஹெட் புரொடெக்ஷன் ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக இல்லாததுதான். இதன் காரணமாக, சைடு போல் இம்பாக்ட் சோதனையும் செய்யப்படவில்லை. குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பொறுத்தவரை, மூன்று வயது குழந்தை பொம்மையின் தலை, முன்பக்க மோதலின்போது காரின் உட்புறத்தில் மோதியது. பக்கவாட்டு மோதல் சோதனையிலும் பொம்மையின் தலையில் அடிபட்டது. இருந்தபோதிலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மொத்தமாக 49-க்கு 29.33 புள்ளிகளைப் பெற்று, இந்த கார் மூன்று ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

டொயோட்டா நிறுவனம் கூறியது என்ன?

தென்னாப்பிரிக்க சந்தைக்கான ஸ்டார்லெட் காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருவதாக, கார் டெலிவரி மற்றும் சோதனை நேரத்தில் டொயோட்டா நிறுவனம் தங்களிடம் தெரிவித்ததாக குளோபல் NCAP கூறியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனில் இப்போது சைடு ஹெட் மற்றும் பாடி ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. இந்த புதிய மாடலை குளோபல் NCAP ஏற்கெனவே வாங்கியுள்ளதாகவும், இரண்டு வெர்ஷன்களையும் வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக, விரைவில் அதையும் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

Read Entire Article