CM Vijay | அப்செட் செய்த முதலமைச்சர் விஜய்... "இதுதான் கடைசி" - பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!

14 hours ago 16

Last Updated:May 12, 2026 2:18 PM IST

CM Vijay | சென்னை அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அன்புமணி மற்றும் சவுமியா வீட்டின் வாசல் வரை வந்து முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சர் விஜயிடம் அன்புமணி அறிமுகப்படுத்திய நிலையில், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார்.

 தன் வீட்டுக்கு வந்த முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி கைபிடித்து திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதேபோல், உதயநிதியும் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், முதலமைச்சர் விஜயும் பரஸ்பரம் சால்வை அணிவித்துக் கொண்டனர்.

 முதலமைச்சர் விஜய்க்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார். முதலமைச்சர் விஜய் புறப்படும் போது வாசல் வரை வந்து மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி வழியனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் வசிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

 அதன்பின் சென்னை அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அன்புமணி மற்றும் சவுமியா வீட்டின் வாசல் வரை வந்து முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சர் விஜயிடம் அன்புமணி அறிமுகப்படுத்திய நிலையில், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 அதன்பின் சென்னை நீலாங்கரையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்ற சீமான், புத்தகம் பரிசளித்தார். முதலமைச்சர் விஜயை கார் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார். தலைவர்களை சந்தித்ததற்காக விஜய் நாகரீக அரசியலை முன்னெடுத்துள்ளதாக பாராட்டுக்கள் கிடைத்துவரும் நிலையில், சீமானை சந்தித்தது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, "வணக்கம் மக்களே. முதலமைச்சர் விஜய் சில அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார். இதில் நீங்கள் விஜய்க்கு சப்போர்ட்டாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எதிரியை விஜய் சந்தித்திருக்கிறாரே என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஸ்டாலின் சார் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரையும் வைகோவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்ததை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒரு அரசியல்வாதி வீட்டுக்கு விஜய் சென்றதில் எனக்கு உடன்பாடு இல்லை.

 முதலமைச்சர் விஜய் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அது அவரின் விருப்பம், முடிவு. ஆனால் பிரச்சாரத்தில் திட்டிக்கொண்டு பிறகு போய் கட்டிப்பிடிப்பது அனைத்தும் மக்களுக்கு குழப்பத்தையே தரும். என்னையும் என் அக்காவையும் காப்பாற்றுங்கள், தமிழ்நாட்டில் வாழ விடுங்கள் என எத்தனையோ வீடியோக்களை போட்டுள்ளேன். மாறாக அனைவரும் அந்த அரசியல்வாதியை சந்தித்து ஆதரவு தருகிறார்கள். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. என்னை கொச்சைப்படுத்தியவர்களுக்கு பாடம் புகட்டிய மக்களுக்கு நன்றி. இதுதான் எனது கடைசி வீடியோ. இனி எனது வாழ்வோ சாவோ நான் கர்நாடகாவில் அதனை பார்த்துக் கொள்கிறேன். எனது எதிரியை ஒருவர் சந்தித்தால் அவரும் எனக்கு எதிரிதான்" என்று பேசியிருக்கிறார்.

AC Tips | ஏசி-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. விடிய விடிய ஏசி ஓடினாலும் மின் கட்டணம் உயராது..!

AC-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. மின் கட்டணம் உயராது!

  • ஆட்டோ மோட், ஸ்லீப் மோட் பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும்.

  • ஏசியை 24 முதல் 26°C வரை இயக்கினால், கம்ப்ரசர் சுமை குறையும்.

  • டைமர் அமைப்பை பயன்படுத்தலாம்; மின் கட்டணம் உயராது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article