CM Vijay | “விஜய்க்கு முன் அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர முயன்றேன்..” -  ஜோதிடர் ராதன் பண்டிட் பழைய பேட்டி வைரல்!

11 hours ago 11

Last Updated:May 12, 2026 6:02 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளரும், விஜயின் தனிப்பட்ட ஜோதிரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD - Political) நியமிக்கப்பட்டுள்ளார்.

 சம்பளம், அதிகாரம் என்ன தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளரும், விஜயின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD - Political) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த நியமனம் முழுக்க முழுக்க அரசியல் விவகாரங்களுக்காக (Political Affairs) மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசு நிர்வாக நடைமுறைகளிலோ அல்லது கோப்புகளைக் கையாளும் அதிகாரப்பூர்வ பணிகளிலோ இவர் தலையிட முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 பொதுவாக இத்தகைய பதவிகள் முதலமைச்சரின் பதவிக்காலம் வரை மட்டுமே நீடிக்கும் தன்மை கொண்டவை. நிர்வாக ரீதியான குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ‘தனிப்பட்ட அரசியல் ஆலோசகர்’ என்ற வாசகம் அரசாணையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அளித்த பழைய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 அந்த பேட்டியில் அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர முயன்றதாக ரிக்கி ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “அஜித்தின் ஜாதகம் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிர்ஷ்டசாலி, அறிவாளி, பிடிவாத குணம் கொண்டவர், இறுக்கமான சிந்தனை கொண்டவர், அதிகம் யோசிப்பவர், உழைப்பு என்றால் என்னவென்று தெரியும். 16 வயதுக்கு முன்பு அவருக்கு நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு விபத்து ஏற்பட்டது.

 எத்தனை விபத்துகள் ஏற்பட்டாலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிலிருந்து மீண்டு வரக்கூடியவர். கிட்டத்தட்ட எம்ஜிஆர் சாயலில் ஒருவர் சினிமாவில் இருக்கிறார் என்றால் அது அஜித் தான். பார்வையாளர்களை கவரும் அனைத்து அம்சமும் அவருக்கு உண்டு. முதல்வராகும் அனைத்து அம்சங்களும் அஜித்துக்கு உண்டு. ஆனால், அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு. நடக்காமலும் போகலாம். இவரைப் போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது.

 அவர் அரசியலுக்கு வந்தால் அதைவிட நல்ல காரியம் இருக்காது. ஆனால், அவர் வர வாய்ப்பில்லை. அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தேன். அஜித் தரப்பிலிருந்து அவருக்கு அரசியலில் விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டனர். அதனால் நான் அவரை விட்டு வந்துவிட்டேன். புத்திசாலியான அவர், அரசியலுக்கு வரமாட்டார் என தோன்றுகிறது” என்றார். இந்த பழைய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

EPF Pension | 12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? எளிய கணக்கீடு இதோ!

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension

  • EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

  • EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.

  • ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article