'EB பில்லை அப்படியே மிச்சப்படுத்தலாம்' - ரூ.78,000 மானியத்துடன் அரசின் 'இலவச மின்சாரம்' திட்டம்!

11 hours ago 4

நம்முடைய மின்சாரப் பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக மட்டுமல்லாமல், மின்சார உற்பத்தியாளராக மாற வேண்டியது அவசியத்தில் இருக்கிறோம்.

Published:1 min agoUpdated:1 min ago

EB பில்

EB பில்

எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.

இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

இலவச மின்சாரம்

இலவச மின்சாரம்

உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே.

இந்த 3kW அமைப்பு ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். மாதத்திற்குச் சுமார் 360 யூனிட்கள் கிடைக்கும். இப்படி நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம்.

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம்.

டார்லிங் சோலார்

டார்லிங் சோலார்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் மே 16-ம் தேதி மதுரையில் நடக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் சோலார் பற்றி தெளிவான அனைத்து கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வருகிறார் டார்லிங் நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன்.

மேலும் இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் வெ.இராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசுகிறார்.

டார்லிங் சோலார்

டார்லிங் சோலார்

நாணயம் விகடன் & Darling Solar வழங்கும் “மொட்டை மாடியில் இலவச மின்சாரம்!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் மே 16-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். பதிவு செய்ய க்ளிக்: https://vil.ltd/vikatn/c/solar_1

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: தமிழ்நாடு பாண்டியன் ஹோட்டல்

Hotel Tamilnadu Pandiyan (Mannar Thirumalai Naicker Mahal) - 1st Floor, Race Course, Alagar Kovil Road, Madurai - 625002

தவறாமல் அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.

Read Entire Article