Hantavirus in India: கொரோனாவைப் போல மோசமான பெருந்தொற்று.! உலகை அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்.! தற்காத்துக்கொள்வது எப்படி?

14 hours ago 13

Hantavirus in India : உலகையே அச்சுறுத்தி வரும் ஹண்டா வைரஸ் (Hantavirus) குறித்தும், அதிலிருந்து நம் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read

Published : May 12 2026, 02:39 PM IST

17

What is HantaVirus?

Image Credit : X/Twitter

What is HantaVirus?

சமீப காலமாக ஹண்டா வைரஸ் பற்றிய செய்திகள் உலக அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக மே 2026 ஆம் ஆண்டு ஒரு சுற்றுலா சொகுசு கப்பலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கொரோனா போல இது மற்றொரு பெரும் தொற்றாக மாறுமா? என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஹண்டா வைரஸ் என்றால் என்ன? இது எப்படி பரவுகிறது? இதிலிருந்து மனிதர்கள் தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

27

ஹண்டா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்

Image Credit : X/Twitter

ஹண்டா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்

ஹண்டா வைரஸ் என்பது எலிகள், சுண்டெலிகள் போன்ற கொறித்துணிகளின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வைரஸ் வகையாகும். இது புதிய நோய் அல்ல, 1950-களில் கொரிய போரின்போது இது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மனிதர்களை தாக்கும் பொழுது இரண்டு முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. .

  • HPS (Hantavirus Pulmonary Syndrome): நுரையீரலை தாக்கி மூச்சு திணறலை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு அமெரிக்க நாடுகளில் அதிகம்.
  • HFRS (Hemorrhagic Fever with Renal Syndrome): சிறுநீரக பாதிப்பு, இரத்தக்கசிவு, தீவிர காய்ச்சலை ஏற்படுத்தும். இது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அதிகம்.

37

ஹண்டா வைரஸ் பெருந்தொற்றாக மாறுமா?

Image Credit : X/Twitter

ஹண்டா வைரஸ் பெருந்தொற்றாக மாறுமா?

மருத்துவர்களின் கூற்றுப்படி ஹண்டா வைரஸ் மிகப்பெரிய பெருந்தொற்றாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவு என கருதப்படுகிறது. அதற்கு காரணங்கள் கொரோனா காற்றினால் மனிதரிடம் இருந்து மனிதருக்கு மிக வேகமாக பரவியது. ஆனால் ஹண்டா வைரஸ் பெரும்பாலும் எலிகளில் இருந்து மட்டுமே மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது அரிதாக நடக்கும். தென் அமெரிக்காவில் காணப்படும் ‘ஆண்டிஸ்’ சென்ற குறிப்பிட்ட வகை மட்டுமே அரிதாக மனிதர்களிடையே பரவக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

47

ஹண்டா வைரஸ் எப்படி பரவுகிறது?

Image Credit : Getty

ஹண்டா வைரஸ் எப்படி பரவுகிறது?

இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு அறிகுறிகள் மிகத் தீவிரமாகவும், வேகமாகவும் தோன்றும். இதனால் நோயாளிகள் விரைவில் தனிமைப்படுத்தப்படுவதால் நோய் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், எச்சம் அல்லது சிறுநீர் காய்ந்து தூசியாக மாறும் பொழுது, அந்த தூசியை நாம் சுவாசிக்கும் பொழுது வைரஸ் பரவுகிறது. எலிகளின் கழிவுகளை தொட்டுவிட்டு அதே கையால் மூக்கு அல்லது வாயை தொடும்பொழுதும் வைரஸ் பரவுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட எதிரிகள் கடிப்பதன் மூலமும் வைரஸ் பரவலாம்.

57

ஹண்டா வைரஸ் அறிகுறிகள் என்ன?

Image Credit : Gemini

ஹண்டா வைரஸ் அறிகுறிகள் என்ன?

தொற்று ஏற்பட்ட ஒன்று முதல் எட்டு வாரங்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். கடுமையான காய்ச்சல், தலைவலி, தசைவலி குறிப்பாக இடுப்பு முதுகு மற்றும் தொடை பகுதிகளில் அதிக வலிகள் ஏற்படும். உடல் சோர்வு, குமட்டல் போன்றவை இதன் தீவிர அறிகுறிகள் ஆகும். நான்கு முதல் பத்து நாட்களுக்குப் பிறகு நுரையீரலில் நீர் கோர்த்து கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படலாம். இது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். மே 2026 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 12 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அர்ஜென்டினா மற்றும் சிலியில் தொடங்கிய இந்த பாதிப்பு தற்போது நெதர்லாந்து, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹண்டா வைரஸால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

67

ஹண்டா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

Image Credit : Gemini And AI Meta

ஹண்டா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

  • எலிகளைக் கட்டுப்படுத்துதல்: இந்த வைரஸை தடுக்க தற்போது வரை முறையான தடுப்பூசிகள் இல்லை. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. வீட்டிற்குள்ளும், சுற்றுப்புறத்திலும் எலிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலிகள் நுழையக்கூடிய ஓட்டைகளை அடைக்கவும். 
  • உணவுப் பாதுகாப்பு: உணவுகளை எப்போதும் மூடி வைக்கவும். எலிகள் பயன்படுத்தியதாக சந்தேகம் இருந்தால் அந்த உணவை தவிர்க்கவும். 
  • சுத்தம் செய்யும் முறை: எலிகள் இருந்த இடத்தை சுத்தம் செய்யும் பொழுது நேரடியாக துடைப்பத்தால் பெருக்காமல் பிளீச்சிங் பவுடர் கலந்த நீரால் நனைத்து, சுத்தம் செய்யவும். 
  • பாதுகாப்புக் கருவிகள்: எலிகள் நடமாட்டம் உள்ள பழைய அறைகளை சுத்தம் செய்யும் பொழுது முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியவும். 
  • கைகளைச் சுத்தப்படுத்துதல்: சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.

77

சிகிச்சை முறை

Image Credit : Gemini

சிகிச்சை முறை

ஹண்டா வைரஸ் பாதிப்புகளுக்கு தனியான சிகிச்சை முறை கிடையாது. இருப்பினும் அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவமனைக்கு சென்றால் தீவிர சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் உதவி மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். இதன் உயிரிழப்பு விகிதம் 38 சதவீதம் வரை இருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் போல இது எளிதில் பரவாது. எனவே வீட்டை சுத்தமாக வைத்திருத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், வீட்டில் எலி தொல்லைகளை குறைத்தல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம் இதிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

Read Entire Article